For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பேராசிரியரின் பாலியல் தொந்தரவு: பல்கலை. மாணவி புகார்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை பல்கலைக்கழக பேராசரியர் ஒருவர் தனக்கு செய்த பாலியல் தொந்தரவுகள் குறித்து புகார் கூறியபி.எச்.டி. மாணவி, அந்தப் புகாருக்கு உரிய நிவாரணம் கிடைக்காததால் மனம் நொந்து போயுள்ளார்.

சென்னை பல்கலைக் கழகத்திற்குட்பட்ட ஆய்வு மையம் தரமணியில் உள்ளது. இங்குள்ள மைக்ரே பயாலஜிதுறையில் பேராசிரியராக பணியாற்றிவருபவர் இளஞ்செழியன் மாணிக்கம். இவரிடம், மருத்துவ மைக்ரோபயாலஜி பிரிவில் பி.எச்.டி. ஆய்வுக்காக சம்பந்தப்பட்ட மாணவி கடந்த ஜனவரி மாதம் அணுகியுள்ளார்.

மாணவியின் அழகில் மயங்கிய பேராசிரியர் மாணிக்கம், வளரவாக்கத்தில் உள்ள தனது வீட்டுக்கு பொங்கல்தினத்தன்று (ஜனவரி 14) வருமாறு கூறியுள்ளார். மாணவியும் அன்று பேராசிரியரின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.அரண்மனை மாதிரி இருந்த வீட்டின் முதல்மாடியில் பேராசிரியர் இருந்தார்.

அங்கு சென்ற மாணவியிடம், பேராசிரியர் தவறாக நடக்க முயன்றதாக தெரிகிறது. இதனால் பயந்து போனமாணவி அங்கிருந்து வெளியேறி பெரம்பூரில் உள்ள தனது நண்பரைத் தொடர்பு கொண்டு நடந்ததைகூறியுள்ளார்.

இதையடுத்து இருவரும் சென்னை பல்கலைக்கழக பதிவாளரிடம் புகார் கொடுத்தனர். அந்தப் புகார் பாலியல்தொந்தரவுகளுக்கான குறைதீர்ப்பு பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பிரிவின் தலைவரான அருணா சிவகாமி,மாணவியை அழைத்து விசாரித்துள்ளார். பின்னர் மாணவியிடம் அவர் சில அறிவுரைகளை கூறியுள்ளார்.

இந்தப் புகார் பகிரங்கமாக விசாரிக்கப்பட்டால் உனது பெயர் கெட்டு விடும். உனது பெற்றோரை வரவழைத்துவிசாரிப்பார்கள். ஆண்கள் நிறைந்த இந்த விசாரணைக்குழுவில் உன்னிடம் விலாவாரியாக விசாரணை நடத்திதர்மசங்கடத்தை ஏற்படுத்துவார்கள். எனவே இதை இப்படியே விட்டுவிட்டால் தான் உனக்கு நல்லது என்றுஅவர் கூறினாராம்.

ஆனாலும் இந்தப் புகாரை விசாரித்தே தீர வேண்டும் என்று மாணவி வலியுறுத்தியுள்ளார். மேலும் தனது துறைதலைவரையும் அணுகி உதவுமாறு கோரியுள்ளார். இதையடுத்து மாணவியின் புகாரை விசாரணைக்கு எடுத்துக்கொண்டனர்.

பேராசிரியர் மாணிக்கத்தை விசாரணைக்குழு அழைத்து விசாரித்தது. அப்போது மாணிக்கம் பதட்டமாககாணப்பட்டாராம், பேசவே முடியாமல் வாய் பலமுறை குழறியதாம். தன் மீதான புகாரை மறுத்த பேராசிரியர்மாணிக்கம், நான் அந்த மாணவியை வற்புறுத்தி அழைக்கவிலலை. அவர் தான் என்னை பலமுறை தொடர்புகொண்டு பேசினார்.

எனது வீட்டை சினிமாவுக்கும், டிவி தொடர்களுக்கும் வாடகைக்கு விடுவது வழக்கம். அதை அறிந்த் கொண்டஅந்த மாணவி, எனக்கு சினிமாவில் நடிக்க ஆசையாக உள்ளது. அவர்களை அறிமுகப்படுத்தி வையுங்கள்என்று என்னை வற்புறுத்தினார்.

சம்பவ நாளன்று அவர் எனது வீடடில் 3 மணி நேரம் இருந்தார். என்னுடன் மதிய உணவையும் சாப்பிட்டார்.நான் அவரை தொந்தரவு செய்திருந்தால் அவ்வளவு நேரம் ஏன் அவர் இருந்தார். உடனேயே கிளம்பிப்போயிருக்கலாமே என்று மாணிக்கம் கேட்டுள்ளார்.

விசாரணைக்குப் பின்னர் புகார் கொடுத்த மாணவியிடமே ஏகப்பட்ட கேள்விகளை கேட்டு விசாரணைக் கமிட்டிகுழப்பியதாம். நீ ஏன் அந்த பேராசிரியர் வீட்டுக்குப் போனாய் என்று விசாரணைக் கமிட்டி கேட்டதால் மாணவிஅதிர்ச்சி அடைந்து விட்டாராம்.

அதே சமயம், பி.எச்.டி ஆய்வு தொடர்பாக விவாதிக்க வேண்டுமானால் மாணவியை துறைக்குத் தான்அழைத்துப் பேராசிரியர் மாணிக்கம் பேசியிருக்க வேண்டும். அதை விடுத்து வீட்டுக்கு அழைத்தது ஏன் என்றுஅவரிடம் கேட்டுள்ளனர்.

விசாரணையின் இறுதியில், பேராசிரியர் மீதான புகாரை நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லையே என்றுவிசாரணைக் கமிட்டி கூறியுள்ளதாம். அதற்குப் பதில் இளஞ்செழியனை கடுமையாக எச்சரித்து விட்டு விடலாம்என்ற முடிவுக்கும் விசாரமைக் கமிட்டி வந்துள்ளதாம்.

பேராசிரியர் இளஞ்செழியனுக்கு விசாரணைக் குழுவைச் சேர்ந்த பலருடன் நெருக்கமான நட்பு இருப்பதால்அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்று சம்பந்தப்பட்ட மாணவி வேதனையுடன்கூறுகிறார். எனவே என்னால் இதற்கு மேல் செயல் பட முடியாத நிலை உள்ளது. நான் மிகவும் பாரம்பரியமானகுடும்பத்தைச் சேர்ந்தவள்.

என்னால் போலீஸ் நிலையத்தை அணுகி புகார் கூற முடியாது என்று விரக்தியுடன் கூறுகிறார் அந்த மாணவி.சம்பந்தப்பட்ட பேராசிரியர் மாணிக்கம் மீது ஏற்கனவே இது போன்ற ஒரு பாலியல் புகார் வந்துள்ளது.மைக்ரோ பயாலஜி துறை ஆய்வகத்தில் பணியாற்றி வந்த ஒரு பெண்ணிடம் அவர் சில்மிஷம் செய்ததாகஅந்தப் புகார் செய்தார்.

ஆனால் அதற்கு ஆதாரம் இல்லை என்று கூறி மாணிக்கத்தை விட்டு விட்டனராம். இப்போது மீண்டும் அதேபேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X