For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இஸ்லாம் குறித்த போப் விமர்சனம்-விஎச்பி கருத்து

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

இஸ்லாம் மதத்தை போப்பாண்டவர் விமர்சித்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாதுஎன்று விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கல் கூறியுள்ளார்.

இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,

இஸ்லாம் மதம் குறித்து விமர்சித்திருப்பதன் மூலம் புதிய போரை ஆரம்பித்துவைத்துள்ளார் போப். வரும் நாட்களில் அது பற்றி எரியப் போகிறது.

இந்த விஷயம் இஸ்லாமியர்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையிலானது. இதைஅவர்கள்தான் தீர்த்துக் கொள்ள வேண்டும். வி.எச்.பி.க்கு இதில் தொடர்பு இல்லை.

அவர்கள் இருவரும் சண்டை போட்டுக் கொள்ளட்டும். நாம் அமைதியாக அதைபார்ப்போம்.

இரு மதங்களுமே தீவிரமானவை. இருவரும் யார் பெரியவர் என்ற மோதலில்இறங்கியுள்ளனர். எனவேதான் பிரச்சினை வெடித்துள்ளது. ஐரோப்பிய கண்டத்தில்இஸ்லாம் பரவ ஆரம்பித்துள்ளது. இதை அவர்கள் விரும்பவில்லை. எனவேதான்இந்த குமுறலை வெளியிட்டுள்ளார் போப்.

இஸ்லாம் குறித்த போப்பின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர் எந்தமதத்தைதான் விட்டு வைத்தார். இந்து சமயத்தையும் அவர் விமர்சித்துள்ளார்.அப்படிப்பட்டவர் கூறும் எந்தக் கருத்தையும் ஏற்கவே முடியாது.

வந்தேமாதரம் நிகழ்ச்சியை சோனியா காந்தி திட்டமிட்டே புறக்கணித்தார்.இந்தியாவின் தேசிய சின்னங்களை காங்கிரஸ் கட்சி புறக்கணிக்க ஆரம்பித்துள்ளது.அஸ்ஸாம் மாநிலத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் எம்.எல்.ஏக்கள்இந்தப் பாடலை பாடுவதை எதிர்த்து போராட்டம் நடத்தினர்.

ராமர் கோவில் பிரச்சினையை பாஜக இனிமேல் எழுப்பாமல் இருப்பதே நல்லது.மக்கள் வெறுப்படைந்து விட்டார்கள். வெறும் வாக்குறுதிகளை நம்ப அவர்கள்தயாராக இல்லை.

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவத்திற்காக அத்வானி வருத்தம்தெரிவித்தார். ஆனால் பாஜக தலைவர் கல்யாண்சிங் மிகவும் தைரியமாக ராமர்ஜென்ம பூமிக்காக இன்னும் குரல் கொடுத்து வருகிறார். ராமர் கோவிலுக்காக அவர்மட்டும்தான் தொடர்ந்து தைரியமாக குரல் கொடுத்து வருகிறார் என்றார் சிங்கல்.

முஸ்லீம்கள் ஆர்ப்பாட்டம்:

இதற்கிடையே இஸ்லாமிய மதத்தை போப் விமர்சித்திப்பதை கண்டித்து உலகெங்கும்முஸ்லீம்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

காஷ்மீரிலும் உத்தரப் பிரதேசத்திலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X