For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ அவமானப்படுத்தினார்: திருமாவளவன் புகார்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

அதிமுக தலைமை எங்கள் சமூகத்தை (தலித் மக்களை) அவமானப்படுத்திவிட்டது என விடுதலைச் சிறுத்தைகள்பொதுச் செயலாளர் திருமாவளவன் கூறியுள்ளார்.

முதல்வர் கருணாநிதியை சந்தித்து திமுக கூட்டணியில் இணைந்த பின் நிருபர்களிடம் திருமாவளவன்பேசுகையில்,

தேர்தல் அரசியலில் களம் எது என்பதை காலம் தான் தீர்மானிக்கும். காலத்தின் கட்டளையை ஏற்று திமுககூட்டணியில் இணையும் முடிவை நாங்கள் எடுத்தோம். அதிமுக கூட்டணியில் சட்டமன்றத் தேர்தலைசந்தித்தபோதும், உள்ளாட்சித் தேர்தலில் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியபோதும் கடுமையானஅவமதிப்பை சந்திக்க நேர்ந்தது.

உணர்வுகளை, உழைப்பை பகிர்ந்து கொள்வது போல வெற்றிகளையும் பகிர்ந்து கொள்ள வேண்டும். அது தான்ஜனநாயகம். ஆனால், எங்களின் உழைப்பை மட்டுமே சுரண்டுவதை நோக்கமாக (அதிமுக) கொண்டிருந்ததைஎங்களால் உணர முடிந்தது.

அதிமுக கூட்டணயில் எங்களுக்கு 4% இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டன. எங்களுக்கு சாதகமான இடங்களில்கூடுதலாக ஒதுக்க வேண்டும் என்று கேட்டு கொண்ட நிலையில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன்.

ஆனால், வெற்றி வாய்ப்பில்லாத தொகுதிகளை எங்கள் தலையில் கட்ட முயன்றனர். இதை எங்களது கட்சியினர்ஏற்க மறுத்து எதிர்ப்பு தெரிவித்தனர். அதை நான் சரி செய்ய முயன்றேன்.

இந் நிலையில் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் அதிமுகவினர் மனு தாக்கல் செய்ய ஆரம்பித்தனர். இதைஅம்மாவிடம் தெரிவிக்க முயன்றேன். நேற்று முன் தினம் அதிமுகவின் மூத்த நிர்வாகிகளை தொடர்புகொண்டேன். அம்மாவிடம் பேச வேண்டும் என்றேன். ஆனால், எந்த பதிலும் வரவில்லை.

ஆனால், நட்டாற்றில் கைவிடுவது போல எங்களுக்கு எந்த தகவலையும் சொல்லாமல் இக்கட்டை சரி செய்யவும்முயலாமல் விடுதலை சிறுத்தைகளுக்கு ஒதுக்கிய இடங்களில் எல்லாம் அதிமுகவை நிறுத்த அக் கட்சியின்மேலிடம் ஆணையிட்டதாக தகவல்கள் வந்தன.

நேற்று வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் மீண்டும் ஜெயலலிதாவை தொடர்பு கொள்ளமுயன்றேன். நானும் எனது 2 எம்எல்ஏக்களும் அம்மாவை சந்திக்க போயஸ் கார்டனுக்கே நேராகப் போய்காத்திருந்தோம். உங்களை சந்திக்க வேண்டும் என்று எழுதி கடிதம் அனுப்பினேன். ஆனால், ஒரு பதிலும்வரவில்லை.

பல மணி நேரம் அங்கேயே காத்திருந்தோம். ஆனால் அவமானம் தான் மிஞ்சியது. கடைசி நேரத்திலாவதுகூப்பிடுவார்கள் என எதிர்பார்த்தேன். ஆனால், அழைப்பு வரவில்லை.

இதன் பிறகு ஒரு கூட்டணிக் கட்சியின் தலைவர் என்ற முறையில் நாங்கள் அதிமுக கூட்டணியில் தான்நீடிக்கிறோம் என்று பத்திரிக்கைகளுக்கு அறிக்கை கொடுத்தேன். அதன் பின்னரும் என்னை அழைக்கவில்லை.இதனால் மன வேதனை அடைந்தேன்.

48 மணி நேரமாக ஒரு கூட்டணிக் கட்சியின் தலைவன் கூட்டணியின் தலைவரை சந்திக்க முயற்சி செய்தும்முடியவில்லை. அந்த அளவுக்கு அங்கு ஏராளமான தடுப்பு சுவர்கள் உள்ளன.

சுயமரியாதையை இழந்துவிட்டு அவமரியாதை சுமந்து அரசியலில் இருக்க நாங்கள் விரும்பவில்லை. இந்தஅவமரியாதையால் எங்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டது. இந்த செயல் மூலம் எங்கள் சமூகத்தையே (தலித்கள்)அதிமுக தலைமை இழிவுபடுத்திவிட்டது.

இதனால் தான் அங்கிருந்து வெளியேறினேன். முதல்வரை சந்தித்தேன்.

முதல்வர் கருணாநிதி எங்களை வாஞ்சையோடு வரவேற்று, உரிய மரியாதை தந்து, இடங்களையும் பகிர்ந்துகொடுப்பதாக உறுதியளித்துள்ளார்.

மதுரை மத்திய தொகுதியில் திமுக கூட்டணியின் வெற்றிக்காக நாங்கள் கடுமையாக பாடுபடுவோம்.

கடந்த கால கசப்பான அனுபவங்களை மறந்து, அன்பும் அரவணைப்பும் காட்டிய முதல்வர் கருணாநிதிக்கு என்நன்றிகளை தெரிவிக்கிறேன் என்றார் திருமாவளவன்.

இட பங்கீடு: கருணாநிதி-திருமா ஆலோசனை:

இந் நிலையில் திருமாவளவன், அவரது கட்சியின் எம்எல்ஏ ரவிக்குமார் ஆகியோர் இன்று அறிவாலயத்தில்கருணாநிதியை சந்தித்து இட பங்கீடு குறித்து பேச்சு நடத்தினர். அப்போது அமைச்சர் ஆற்காடு வீராசாமியும்உடனிருந்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X