For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நான் குடிகாரனா? ஜெ.வுக்கு விஜயகாந்த் கண்டனம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:முன்னாள் ஆளுநர் சென்னா ரெட்டியையே கொச்சைப்படுத்திப் பேசிய ஜெயலலிதா என்னை அவதூறு கூறிப்பேசியதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்று தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த்கூறியுள்ளார்.

விஜயகாந்த்தை குடிகாரன் என்று கூறி மிகக் கடுமையாக விமர்சித்து நேற்று அறிக்கை விட்டிருந்தார் ஜெயலலிதா.இது தேமுதிகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயலலிதாவின் அறிக்கைக்கு விஜயகாந்த் பதில் அளித்துள்ளார். அந்த அறிக்கையில் விஜயகாந்தகூறியிருப்பதாவது:

பெண்கள் மீதும், தாய்மார்கள் மீதும் நான் மிகுந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருப்பவன். என்னைப் பற்றிஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பழி சொல்லி அறிக்கை விட்டிருப்பதை நான் சற்றும்எதிர்பார்க்கவில்லை.

இரவு பகல் பாராமல் கடந்த ஓராண்டு காலமாக பொதுமக்களையும், தொண்டர்களையும் தமிழ்நாடு முழுவதும்தேர்தலில் நான் சந்தித்துள்ளேன். நான் எப்படிப்பட்டவன் என்பதை பொதுமக்கள் நேரிலேயே பார்த்துவருகின்றனர்.

நான் குடித்து விட்டு குளு குளு அறையில் கிடப்பவன் அல்ல. ஊழலை ஒழிப்பதும், வீட்டுக்கு வீடு ரேஷன்பொருள் வழங்குவதும் ஜெயலலிதாவுக்கு வேண்டுமானால் குடிகாரன் பேச்சாகத் தெரியலாம்.

வீடு தோறும் அரசின் வசதிகளை கொண்டு செல்வது அரசுகளின் கடமை என்பது இந்த நவீன அரசியல் யுகத்தில்கடைப்பிடிக்கப்படுவதாகவும். வீடு தோறும் ரேஷன் பொருட்களை வழங்குவது என்பது மனமிருந்தால்மார்க்கண்டு என்பவருக்கு தெளிவாகும். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஒரு இமயம். என்னைக் கருப்பு எம்.ஜி.ஆர். என்று நான் ஒருபோதும் சொல்லிக்கொண்டதில்லை. ஜெயலலிதாவைப் போல மேரி மாதா, அன்னை தெரசா என்ற அந்தஸ்துக்கும் என்னைஉயர்த்திக் கொண்டதும் இல்லை. அதை நான் விரும்பவும் இல்லை.

எம்.ஜி.ஆர். இல்லையே என்ற ஏக்கத்தில் நாட்டு மக்கள்தான் என்னை கருப்பு எம்.ஜி.ஆர். என்றுஅழைக்கிறார்களே தவிர வேறல்ல. அவருடைய லட்சக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மீது மிகுந்த அன்பையும், மரியாதையையும், பாசத்தையும் வைத்திருப்பவன் நான்.அவர் வாழ்வில் இரண்டற கலந்து வாழ்ந்த ஜானகி ராமச்சந்திரன் இதை நன்கு அறிந்து, எம்.ஜி.ஆர்.பயன்படுத்திய பிரசார வண்டியை எனக்குப் பரிசாக அளித்துள்ளார். அவர் வாழ்ந்து காட்டிய நெறியில், நான்உழைத்து சம்பாதித்த பணத்தில் ஆண்டுதோறும் என் பிறந்த நாளில் 25 லட்சம் ரூபாய் ஏழை எளிய மக்களுக்குவழங்கி வருகிறேன்.

1992ம் ஆண்டு முதல் எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளிக்கு எனது சொந்தப் பணத்தில் இருந்து ரூ.50,000ஆண்டுதோறும் வழங்கி வருகிறேன். இன்றளவும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் ஆசி எனக்கு என்றும் உண்டு.இன்றும் என்றும் அவரையே எனது அரசியல் ஆசானாக கொண்டுள்ளேன்.

ஆளுநர் சென்னாரெட்டியையே கொச்சைப்படுத்திய ஜெயலலிதா, என்னைப் பற்றி அவதூறாகப் பேசுவதில் எந்தவியப்பும் இல்லை. யார் என் மீது சேற்றை வாரி வீசினாலும், அவற்றை சந்தனமாக ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை நான் பெற்றிருக்கிறேன்.

இதுபோன்ற விமர்சனத்தை தவிர்த்து ஆக்கப்பூர்வமான ஆரோக்கியமான மக்கள் மதிக்கத்தக்க அரசியல் ரீதியானவிமர்சனங்களையும், அறிக்கைகளையும் என்றைக்குமே நான் வரவேற்பேன்.

எம்.ஜி.ஆர். கனவு பற்றிப் பேசும் ஜெயலலிதா அவரது கனவுகளை இரண்டு முறை முதல்வராக இருந்தபோதுநிறைவேற்றாதது ஏன்? எம்.ஜி.ஆர். இதய தெய்வம் என்றும், நிறுவனத் தலைவர் என்றும், பாரத ரத்னா என்றும்தங்கள் வாயால் புகழ வைத்ததையே எனக்குக் கிடைத்த பெரும் பேறாக கருதுகிறேன்.

என்னாலாவது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பெயரை இத்தனை தடவை உச்சரித்தீர்களே, அதற்காக எனதுஇதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை திமுக ஆட்சியை அகற்றுவதே குறிக்கோள். ஜெயலலிதா போன்றோர் நம் மீதுபாய்வது திசை திருப்பும் முயற்சி. இந்த சதி வலையில், சிக்காமல், அப்போது கூறிய முயல் வேட்டையை விடவேல் ஏந்திச் செல்லும் யானை வேட்டையே மேல் என்ற அடிப்படையில் ஜனநாயகத்தை காப்பாற்ற கழகத்தொண்டர்கள் பாடுபட வேண்டும் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.

ஜெ. மீது நடவடிக்கை?

இதற்கிடையே, சட்டசபைக்கு விஜயகாந்த் குடித்து விட்டு வருவதாக ஜெயலலிதா கூறியிருப்பது, சட்டசபையின்மாண்பைக் கெடுப்பதாக உள்ளது. இதுகுறித்து விசாரித்து ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகாங்கிரஸ் எம்.எல்.ஏ. பீட்டர் அல்போன்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக சபாநாயகர் ஆவுடையப்பனை நேரில் சந்தித்து அவர் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார்.அப்போது விஜயகாந்த், குடித்து விட்டு சட்டசபைக்கு வருகிறார் என்று ஜெயலலிதா கூறியுள்ளது சபையின்மதிப்பைக் குறைக்கும் வகையில் உள்ளது.

விஜயகாந்த சட்டமன்றத்திற்குப் பொறுப்புடன் வந்து செல்கிறார். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாகூறியது சட்டசபைக்கு வந்த விபத்தாக உள்ளது. எனவே அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகோரினார்.

இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் ஆவுடையப்பன் பேசுகையில், ஜெயலலிதாவின் அறிக்கைசட்டசபையின் மாண்பைக் குறைக்கும் வகையில் உள்ளதாக பீட்டர் அல்போன்ஸ் கூறியுள்ளார்.

நான் சென்னை செல்லவுள்ளேன். அப்போது ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையின் அசலை ஆராய்ந்து பார்த்து,அதில் மரபை மீறிய வகையில் குறிப்பிடப்பட்டிருந்தால், அவமதிக்கும் செயலாக இருந்தால், கண்ணியத்தைக்குறைக்கும் செயலாக இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஆவுடையப்பன்.

தேமுதிகவினர் போராட்டம்:

இதற்கிடையே, ஜெயலலிதாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து இன்று மாநிலத்தின் சில பகுதிகளில்தேமுதிகவினர் போராட்டம் நடத்தினர்.

புதுக்கோட்டையில் 25 தேமுதிக தொண்டர்கள் ஜெயலலிதாவின் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர்.அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

இதேபோல ஸ்ரீரங்கத்தில் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் தலைமையில் ஜெயலலிதாவுக்கு கண்டனம்தெரிவித்து போராட்டம் நடந்தது. சேலத்தில் ஜெயலலிதாவின் உருவ பொம்மையை தேமுதிக தொண்டர்கள் எரித்தனர். கும்பகோணத்திலும்ஜெயலலிதாவைக் கண்டித்து போராட்டம் நடத்தப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X