For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருணாநிதி வழங்கிய கடமைத் தொகை

By Staff
Google Oneindia Tamil News

திருச்சி:வேலை வாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு திமுக அரசு வழங்குவது உதவித் தொகையோ, கருணைத் தொகையோஅல்ல, இது கடமைத் தொகை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தமிழக அரசு மாதந்தோறும் உதவித் தொகையை அறிவித்துள்ளது.அதன்படி 10வது வகுப்பு படித்தோருக்கு மாதம் ரூ. 150, பிளஸ் டூ முடித்தவர்களுக்கு ரூ. 200, பட்டப்படிப்பைமுடித்தவர்களுக்கு ரூ. 300 என உதவித் தொகை அளிக்கப்படவுள்ளது.

இத்திட்டத்தை முதல்வர் கருணாநிதி திருச்சியில் தொடங்கி வைத்தார். அண்ணா விளையாட்டரங்கில் நடந்த இந்தநிகழ்ச்சியில் அவர் பேசுகையில், இன்று 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த உதவித் தொகைவழங்கப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் மட்டும் 14 ஆயிரத்து 89 பேருக்கு இந்த உதவித் தொகைவழங்கப்படுகிறது.

இந்த உதவித் தொகை மூலம் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களின் துயரத்தை அறவே துடைத்து விட முடியாது.இது அவர்களுக்கு அரசு செய்யும் ஒரு ஆறுதலான உதவி தான்.இதை உதவித் தொகை என்றோ, கருணைத் தொகை என்றோ கூறாமல், கடமைத் தொகை என்று தான் கூறவேண்டும். இந்த உதவித் தொகையை பெறுகின்ற இளைஞர்களிடமிருந்து நான் கைமாறு எதையும்எதிர்பார்க்கவில்லை. இத்தொகையை அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைத்து தங்களது தேவைகளை ஓரளவுநிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.

இந்தப் பணத்தைப் பயன்படுத்தி வேலை வாய்ப்புகளைப் பெற்று வீட்டைக் காப்பாற்றி அதன் மூலம் நாட்டையும்காப்பாற்ற பயன்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால் நான் உற்சாகம் அடைவேன்.

நாம் தேர்தல் நேரத்தில் தந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது, இது நடக்காது, நம்பாதீர்கள் என்று சிலர்சொன்னார்கள். ஆட்சி பொறுப்புக்கு நாம் வந்தபோது தொடர்ந்து தர முடியாது என்றார்கள். அப்படிக் கூறியநேரத்தில்தான் கொண்டு வா கோப்புகளை என்று கூறி பதவி ஏற்பு நிகழ்ச்சியிலேயே கூட்டுறவு கடன் ரூ.7000கோடி ரூபாய் கடனை ஒரே நேரத்தில் ஒரே கையெழுத்தில் ரத்து செய்த ஆட்சிதான் எனது தலைமையில்உங்களால் அமைக்கப்பட்ட கழக ஆட்சி.

5 மாதங்களில் 6 பெரிய தொழிற்சாலைகள், 3000 கோடி வெளிநாட்டு முதலீடு செய்கின்ற அளவுக்கு அந்ததொழிற்சாலைகள் உடனே அமைய இருக்கிறது. இதன் மூலம் பல்லாயிரம் பேருக்கு உடனே வேலை கிடைக்கும்வாய்ப்பு இருக்கிறது.

வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வழங்கப்படும் இந்தத் தொகை ஏதோ ஜாலியாக, இஷ்டம் போல செலவுசெய்வதற்காக அல்ல இது முதல் அமைச்சர் கொடுக்கின்ற தொகை அல்ல, தம்பி உன்னுடைய அண்ணன்உனக்காக கொடுக்கின்ற தொகை. நீ அந்தக் கடமையை சரியாக நிறைவேற்று. நான் மனம் மகிழ நிறைவேற்றுஎன்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X