For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓமலூர் பள்ளியில் பல மாணவிகள் கொலை?

By Staff
Google Oneindia Tamil News

சேலம்:சேலம் மாவட்டம் ஓமலூரில் சமீபத்தில் பிளஸ்டூ மாணவி சுகன்யா மர்மமான முறையில் பிணமாகக் கிடந்தபள்ளிக்கூட வளாகத்தில் மேலும் பல மாணவிகள் கொன்று புதைக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு குற்றச்சாட்டுஎழுந்துள்ளது.

ஓமலூர் மெயின் ரோட்டில், தனியார் மகளிர் மேல் நிலைப்பள்ளி உள்ளது. இங்கு விடுதியும் உள்ளது. இந்தப்பள்ளியில் தர்மபுரி மாவட்டம் சின்னம்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த சுகன்யா என்ற 17 வயது மாணவி தங்கிபிளஸ்டூ படித்து வந்தார்.

சில தினங்களுக்கு முன்பு இவரது இறந்த உடல் பள்ளி வளாகத்தில் உள்ள கிணற்றில் மிதந்தது. இதனால்கொந்தளித்த ஓமலூர் மற்றும் சுற்று வட்டார மக்கள் பள்ளியை சூறையாடினர். பள்ளிக் கூட அறைகளுக்குத்தீவைக்கப்பட்டது. பொருட்கள் தாறுமாறாக அடித்து உடைக்கப்பட்டன. மேலும் சேலம்-பெங்களூர் சாலையில்சுமார் 3 மணி நேரம் சாலை மறியல் போராட்டம் நடந்தது.

ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு நடத்திய இந்தப் போராட்டத்தால் ஓமலூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை 16 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சுகன்யா கொடூரமாக கற்பழித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இதற்குப் பள்ளி நிர்வாகிகளே காரணம் எனபொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இப்பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் சித்திரவதைகள் அதிகஅளவில் நடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

குறிப்பாக விடுதியில் தங்கிப் படிக்கும் வெளியூர் மாணவிகள்தான் இக்கொடுமைக்கு அதிகம் ஆளாவதாகவும்,பள்ளி நிர்வாகிகள் சிலர்தான் இதற்குக் காரணம் என்பதும் மக்களின் குற்றச்சாட்டு.

சுகன்யாவைப் போல மேலும் பல மாணவிகள் இதுபோல கற்பழித்துக் கொலை செய்யப்பட்டு பள்ளிவளாகத்திலேயே புதைக்கப்பட்டுள்ளனர். இதைக் கண்டறிய பள்ளிக் கூட வளாகத்தைத் தோண்டி விசாரணைநடத்தப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தப் பள்ளியின் விடுதியில் தங்கிப் படித்து வந்த பல ஆதரவற்ற மாணவிகளை காணவில்லை என்றும் அவர்கள்கற்பழித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையே போலீஸார் பள்ளி வளாகத்தில் நேற்று சோதனை நடத்தினர். அப்போது சில காலி மது பாட்டில்கள்இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மது பாட்டில்கள் இங்கே எப்படி வந்தன, யார் இங்கே வந்து மதுஅருந்தியது என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சுகன்யா சாவு தொடர்பாக மேல் நிலைக் கல்வி இணை இயக்குநர் கருப்பசாமிசென்னையிலிருந்து நேற்று ஓமலூர் வந்து பள்ளிக் கூடத்தில் விசாரணை நடத்தினார். பள்ளியில் வேலை பார்க்கும்ஆசிரியைகளிடம் அவர் விசாரணை நடத்தினார். இதுதவிர ஊழியர்களிடம் அவர் விசாரணை நடத்தினார்.

தொடர்ந்து பதட்டம் நிலவி வருவதால் இப்பள்ளிக் கூடத்திற்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.போலீஸாரும் பள்ளி வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஆசிரியர்கள் உள்பட 86 பேர் மாற்றம்:

இந்நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியை மற்றும் விடுதி வார்டன் ஆகியோர்மாற்றப்பட்டுள்ளனர் என வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்கூறியுள்ளார்.

இன்று ஓமலூர் பாத்திமாக மகளிர் மேல் நிலைப்பள்ளிக்கு வந்து ஆய்வு செய்தஅமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, பள்ளிதலைமை ஆசிரியை, உட்பட ஆசிரியர்கள் 53 பேர், ஆசிரியர் அல்லாதோர் 8 பேர்,பள்ளி நிர்வாகத்தில் 10, நர்சரி பள்ளி ஆசிரியர்கள் 15 உட்பட மொத்தம் 86 பேர்இடமாற்றம் செய்யப்பட்டுவுள்ளனர்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் மேற்பார்வையில் பள்ளியை விரைவில்திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவல்துறை மற்றும் ஆர்.டி.ஓ.விசாரணைக்குப் பின்னர் தவறு செய்தவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கைஎடுக்கப்படும்.

இப்பள்ளி விடுதியில் தங்கிப் படித்து காணாமல் போன மாணவிகள் குறித்தும்விசாரிக்கப்படும் என்றார் வீரபாண்டி ஆறுமுகம்.

முதல்வர் இரங்கல்:

இதற்கிடையே மாணவி சுகன்யாவின் மரணம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ளமுதல்வர் கருணாநிதி, அவரது குடும்பத்திற்கு ரூ.50,000 நிதியுதவி முதலமைச்சர்பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X