For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பஸ், ரயில்கள் முடக்கம்-கேரளாவுக்கு பாடம்ம்

By Staff
Google Oneindia Tamil News

தேனி:முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளத்துக்கு எதிராக கோவை, தேனி,கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் வாகனங்களைத் தடை செய்து போராட்டம்நடத்தி வருவதால் கேரள மாநிலத்திற்கான போக்குவரத்து அடியோடு முடங்கிப்போயுள்ளது.

இதனால் தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு பால், காய்கறிகள், கால்நடைகள், உணவுதானியங்கள் செல்வது பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தப் பொருட்களுக்குகேரளாவில் விரைவில் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.

கேரளத்தின் திமிர்த்தனம், முதுகில் குத்தும் செயலைக் கண்டித்து தமிழக விவசாயிகள்இந்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

தேனி, கோவை, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கேரள எல்லைப் பகுதியில்விவசாயிகள் முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டம் நடத்தி வருவதால்தமிழகத்திலிருந்து கேரளாவுக்கும், அங்கிருந்து தமிழகத்திற்குமான வாகனப்போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.

நேற்று ஆரம்பித்த இந்தப் போராட்டம் இன்றும் தொடர்கிறது. தேனி மாவட்டம்கம்பம், குமுளி, லோயர் கேம்ப், போடிநாயக்கனூர் ஆகிய இடங்களில் விவசாயிகள்சாலை மறியலை மேற்கொண்டுள்ளனர்.

இதே போல கோவை மாவட்டம் வாலையாறு, பொள்ளாச்சி அருகே கோவிந்தாபுரம்,வீரப்பன் சத்திரம் உள்ளிட்ட கேரள எல்லைப் பகுதிகளிலும் விவசாயிகள் போராட்டம்நடத்தி வாகனப் போக்குவரத்தை தடுத்து நிறுத்தினர்.

கோவை மாவட்டம் காக்காசாவடி அருகே உள்ள வேலாந்தவளம் பிரிவு என்றஇடத்தில் திமுக நகரச் செயலாளர் பழனிச்சாமி தலைமையில் சாலை மறியல் நடந்துவருகிறது.இவர்கள் நேற்று முதல் இங்கேயே கூடாரம் போட்டுத் தங்கி மறியல்போராட்டத்தில் ஈடுபட்டள்ளனர். அவர்களோடு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவிவசாயிகள், பொதுமக்களும் பங்கேற்றுள்ளனர்.

கேரள பதிவு எண் கொண்ட வாகனங்களை தமிழகத்திற்குள் நுழைய விடாமல் தடுத்துஅங்கிருந்து திருப்பி அனுப்பி வருகின்றனர். தமிழக எல்லையிலிருந்து 10 கி.மீமுன்பாகவே கேரளப் பகுதியில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால்பேருந்துகளில் வரும் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

சில வாகனங்கள் குறுக்கு வழியாக கோவைக்குள் நுழைவதை அறிந்த பெரியார்திராவிட கழக தொண்டர்கள் அந்தப் பாதைகளையும் அடைத்து மறியல்போராட்டத்தில் குதித்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் கேரளாவுக்கு முன்பாக உள்ள எல்லை நகரான வாலையாறுவழியாக கேரளாவிலிருந்து ஒரு வாகனமும் வர முடியவில்லை. முற்றிலும்போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு போலீஸார் அதிக அளவில்குவிக்கப்பட்டுள்ளனர்.

மதுரையிலிருந்து பாலக்காடு சென்ற பாசஞ்சர் ரயிலை பொள்ளாச்சி அருகேவிவசாயிகள் மறித்து நிறுத்திப் போராட்டம் நடத்தினர். இதனால் ரயில் புறப்பட்டுச்செல்வதில் பெரும் தாமதம் ஏற்பட்டது. அந்த ரயில் தொடர்ந்து அங்கேயே நிற்கிறது.

இதேபோல திருப்பூரில் இன்று காலை திருவனந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலும்நிறுத்தப்பட்டது

கன்னியாகுமரி மாவட்டத்திலும் எல்லைப் பகுதியில் விவசாயிகள் முற்றுகையிட்டுப்போராட்டம் நடத்தி வருவதால் கேரளாவுக்கான வாகனப் போக்குவரத்து முடங்கிப்போயுள்ளது.

சில இடங்களில் கேரள அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் கல்வீசித்தாக்கப்பட்டதால் அங்கு பதட்டம் நிலவுகிறது.

குமரி மாவட்டத்தின் சில பகுதிகள் வழியாக மட்டுமே கேரளாவுக்கான போக்குவரத்துபாதிக்கப்படாமல் உள்ளது.

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் கேரள அரசு நியாயமாக நடந்துகொள்ளும் வரை போராட்டத்தைத் தொடரப் போவதாக விவசாயிகள்அறிவித்துள்ளனர்.

கிளர்ச்சி வேண்டாம்: கருணாநிதி

இந் நிலையில் கேரளாவுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட வேண்டாம் எனவிவசாயிகளுக்கு முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

முல்லைப் பெயாறு அணை விவகாரம் தொடர்பாக கேரளாவுக்குச் செல்லும்அத்தியாவசியப் பொருட்களையும், போக்குவரத்தையும் தடுப்பது இரு மாநிலஉறவுகளுக்கு ஏற்புடையதல்ல.

இப் பிரச்சினையில் நியாயப்படியும், சட்டப்படியும் கிடைக்க வேண்டியஉரிமைகளுக்காக தமிழக அரசு தொடர்ந்து பாடுபடும் என்பதில் நம்பிக்கை வைத்துயாரும் கிளர்ச்சியில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X