For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை விமானங்களில் கதிர்வீச்சு சோதனை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:சென்னை விமான நிலையத்திலிருந்து இயங்கும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் உள்ளிட்ட வெளிநாட்டு விமானங்களிலும்,அதில் பயணம் செய்யும் பயணிகளிடம் கதிர் வீச்சு சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Alexander
அலெக்ஸாண்டர் கதிர்வீச்சால்
பாதிக்கப்படும் முன்னும், பின்னும்

ரஷ்ய நாட்டு முன்னாள் உளவாளி அலெக்ஸாண்டன் லிட்வினிகோ சமீபத்தில் இங்கிலாந்தில் கதிர்வீச்சால்பாதிக்கப்பட்டு இறந்தார். இவரை ரஷ்ய அதிபர் புடின் தான் போலோனியம் கதிர்வீச்சு ரசாயணம் மூலமாக காலிசெய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

புடினின் எதிர்ப்பாளரான அலெக்ஸாண்சர் இங்கிலாந்தில் வசித்து வந்தார். அவரை அவரது நண்பர் மூலமே காலிசெய்துவிட்டார் புடின் என்கிறார்கள். அலெக்ஸாண்டரை ஒரு ஹோட்டலில் வைத்து சந்தித்த அந்த நண்பர்தேனீரில் போலோனியம் ரசாயணத்தைக் கலந்தார்.

அதை அருந்திய அலெக்ஸாண்டர் உடல் நிலை பாதிக்கப்பட்டார். முடியெல்லாம் கொட்டிப் போனது, நடக்கமுடியாமல், மூச்சு விட முடியாமல் திணறிய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஒரு வாரத்தில் இறந்துபோனார்.

இவரது மரணத்திற்கு புடின் தான் காரணம் என சர்ச்சை எழுந்துள்ளது. போலோனியம் ரஷ்யாவில் இருந்து தான்வந்திருக்க வேண்டும் என்று கருதிய பிரிட்டிஷ் உளவுப் பிரிவு அந் நாட்டுக்கு இயக்கப்பட்ட இங்கிலாந்துவிமானங்களில் கதிர்வீச்சு சோதனை நடத்தியபோது சில பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானங்களில் போலோனியம்கதிர்வீச்சு இருப்பதை கண்டுபிடித்தது.

அந்த விமானங்கள் தரையிறக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதும் இயக்கப்பட்ட இந்தவிமானங்களில் பயணம் செய்த சுமார் 35,000 பயணிகளின் பட்டியலையும் எடுத்துக் கொண்டு அவர்கள் உடலைகதிர்வீச்சு தாக்கியுள்ளதா என்பதை அறிய பிரிட்டன் முயன்று வருகிறது.

கதிர்வீச்சு கொண்ட ரசாயனங்களை விமானங்களில் கடத்துவதைத் தடுக்க உலகம் முழுவதும் சோதனைகள்தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், சென்னையிலிருந்து இயக்கப்படும் பிரிட்டிஷ் ஏர்வேஸ், லூப்தான்சா உள்ளிட்ட வெளிநாட்டுவிமானங்களில் கதிர்வீச்சு சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனால் இந்த விமானங்களிலும், அதில் பயணிக்கும் பயணிகளிடமும் கதிர்வீச்சு சோதனைநடத்தப்படுகிறது. சோதனைக்குப் பிறகு விமானங்களில் ஏற பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். சோதனைநடத்தப்பட்ட பின்னரே விமானங்கள் கிளம்பவும் அனுமதிக்கப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X