For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விமான நிலையத்திற்கு புதிய இடம்: கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:சென்னை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக குடியிருப்புகளை உள்ளடக்கிய இடம்கையகப்படுத்தப்பட மாட்டாது. மாற்று இடம் பார்க்கப்பட்டு வருவதால் சென்னை புறநகர மக்கள் கவலைகொள்ள வேண்டாம் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

சட்டசபையில் இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் சிவபுண்ணியம் பேசுகையில், சென்னை விமான நிலையவிரிவாக்கத்தால் 4629 வீடுகள், கோவில்கள், பள்ளிக்கூடங்கள் உள்ளிட்ட கட்டடங்கள் இடிக்கப்படும் என பீதிநிலவுகிறது. இதனால் அப்பகுதியினர் போராட்டத்தில் குதித்தள்ளனர்.

மக்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில், விரிவாகத் திட்டத்தை அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார். இதற்கு முதல்வர் கருணாநிதி பதிலளிக்கையில், எந்த நல்ல காரியத்தை அரசுமேற்கொண்டாலும் அதனால் சிலருக்குப் பாதிப்பு ஏற்படத்தான் செய்யும். என்றாலும் நலிந்தவர்கள்,மெலிந்தவர்களைப் பார்த்துத்தான் அரசு முடிவெடுக்கும். தற்போது விமான நிலையத்திற்கு குறிப்பிடத்தைஇடத்தைதத்தான் எடுக்கப் போகிறார்கள் என பிரசாரம் செய்து பீதியை கிளப்பிக் கொண்டுள்ளனர்.

இப்படிப்பட்ட பீதியான செய்திகளை நம்பக் கூடாது. இப்படித்தான் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில்142 அடியாக உயரத்தைக் கூட்டினால் 30 லட்சம் இறந்து விடுவார்கள் என அர்த்தமற்ற பீதி கிளப்பப்பட்டது.

எனவே பீதிகளை மக்கள் நம்பக் கூடாது. வேறு இடத்தில் விரிவாக்கப் பணிகளை மேற்கொள்வது குறித்துஆலோசிக்கப்பட்டு வருகிறது, மாற்று இடம் குறித்து சம்பந்தப்பட்டவர்கள் யோசித்து வருகிறார்கள்.

எனவே சிவபுண்ணியம் உள்பட யாரும் இதை நம்ப வேண்டாம் என்றார் கருணாநிதி.

60 துணை மின் நிலையங்கள்:

மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையில், நடப்பாண்டில் புதிதாக 60 துணைமின் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. போதிய இடம் கிடைக்காமல் உள்ளது.இதனால்தான் கால தாமதம் ஆகிறது.

கடந்த 15 ஆண்டுகளாக டிரான்ஸ்பார்மர்கள் மாற்றப்படாமல் பழுதடைந்து உள்ளன. வரும் மார்ச் மாதத்திற்குள்4000 டிரான்ஸ்பார்மர்களை பழுது நீக்கி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார் வீராசாமி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X