For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராஜவேலு-இன்டர்போல் உதவியை நாட உத்தரவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சேதுபதி ராமலிங்கத்தின் மகன் ராஜவேலுவைஇன்டர்போல் உதவியுடன் கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் என்று சென்னை மாநகர காவல்துறைஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Sangeetha with her husband Rajavelu
பெரியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சேதுபதி ராமலிங்கத்தின் மகன் ராஜவேலு. இவருக்கும்,சங்கீதா என்பவருக்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின்னர் சங்கீதாவை தான் பணியாற்றி வரும்அமெரிக்காவுக்கே அழைத்துச் செல்வதாக ராஜவேலு உறுதியளித்திருந்தார்.

ஆனால் கூறியபடி சங்கீதாவை அவர் அழைத்துச் செல்லவில்லை. இதையடுத்து சங்கீதா உயர்நீதிமன்றத்தில்வழக்கு தொடர்ந்தார். ராஜவேலு தன்னை அழைத்துச் செல்லவில்லை. மாமனார் வீட்டில் தனக்கு செக்ஸ்கொடுமைகள் உள்பட பல்வேறு கொடுமைகள் நடப்பதாக கூறியிருந்தார்.

இந்த வழக்கை அப்போது விசாரித்த நீதிபதி கற்பகவிநாயகம் ராஜவேலுவை நீதிமன்றத்திற்கு வரவழைத்துபல்வேறு அறிவுரைகளை வழங்கினார். மேலும் இருவருக்கும் தனது முன்னிலையில் மீண்டும் திருமணம் நடத்திதனித்து ஹோட்டலில் தங்கி மனம் விட்டுப் பேசுமாறும் உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து சங்கீதாவுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்த ராஜவேலு, அவரை விரைவில்அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்வதாகவும் உறுதியளித்தார். ஆனால் மறுபடியும் வேதாளம் முருங்கை மரம்ஏறிய கதையாக சங்கீதாவை ஏமாற்றி விட்டு அமெரிக்காவுக்குப் போய் விட்டார். அதன் பிறகு அவர் திரும்பிவரவே இல்லை.

இதையடுத்து சங்கீதா மீண்டும் உயர்நீதிமன்றத்தை அணுகி ராஜவேலு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குதொடர்ந்தார். இந்த வழக்கை கடந்த 28ம் தேதி உயர்நீதிமன்றம் விசாரித்தது.

அப்போது இன்றைக்குள் ராஜவேலு நீதிமன்றத்தில் ஆஜராகாவிட்டால், சேதுபதி ராமலிங்கம் மற்றும் அவரதுமனைவியை சிறையில் அடைக்க நேரிடும் என கடும் எச்சரிக்கை விட்டது.

இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது ராஜவேலு ஆஜராகவில்லை. சேதுபதி சார்பில் தாக்கல் செய்யப்பட்டமனுவில் ராஜவேலுவை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

காவல்துறை ஆணையர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இன்னொரு மனுவில், சர்வதேச போலீஸ் (இன்டர்போல்)உதவியுடன் அமெரிக்க போலீஸாருக்கு ராஜவேலு குறித்த விவரங்களை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதைத் தெர்டர்ந்து ஜனவரி 8ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்த உயர்நீதிமன்றம், இன்டர்போல் உதவியுடன்ராஜவேலுவைக் கைது செய்து அந்தத் தேதிக்குள் ஆஜர்படுத்த வேண்டும் என மாநகர காவல்துறைஆணையருக்கு உத்தரவிட்டது.

அப்படி ராஜவேலுவைக் கைது செய்ய முடியவில்லை என்றால் சேதுபதி ராமலிங்கம், அவரது மனைவியைசிறையில் அடைக்க நேரிடும் எனவும் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X