For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எண்கெளன்டர் பயத்தில் தமிழக ரவுடிகள்!!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:ரவடி பங்க் குமாரைத் தொடர்ந்து மேலும் சில ரவுடிகளுக்கு போலீஸ் என்கவுண்டர் குறி வைத்துள்ளதால்சென்னை நகரில் அட்டகாசம் செய்து வரும் ரவுடிகள் பீதியடைந்துள்ளனர். பலர் சென்னையை விட்டு வெளியேறிவருகின்றனர்.

ரவுடிகளை என்கவுண்டர் மூலம் போலீஸார் தீர்த்துக் கட்டுவது சென்னைக்குப் புதிதல்ல. சென்னை நகரின் மிகப்பெரிய தாதாவாக உலா வந்து கொண்டிருந்த அயோத்தி குப்பம் வீரமணியை ஒத்த ஆளாக போய் மெரீனாகடற்கரையில் வைத்து சுட்டுத் தள்ளினார் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை.

வீரமணியை போட்டுத் தள்ளிய பிறகு சென்னையில் வாலாட்டி வந்த பல ரவுடிகளுக்கு கிலி பிடித்துக் கொண்டது.இதைத் தொடர்ந்து கட்டப் பஞ்சாயத்து உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வந்தவரான வெங்கடேச பண்ணையாரைஅவரது வீட்டிலேயே வைத்து போலீஸார் சுட்டுக் கொன்றனர். இது ஜாதி ரீதியிலான பிரச்சினைகளை எழுப்பியது.

திமுக ஆட்சிக்கு வந்த பின் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பிரபல ரெளடி நாகூர் மீரனை காலி செய்துஎண்கெளண்டர்களுக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது. தொடர்ந்து திருச்சியைக் கலக்கிய ரெளடி முட்டைரவியின் கதை முடிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் ரெளடி கொர கிருஷ்ணன், செந்தில் ஆகியோரும் எண்கெளன்டரில்முடிக்கப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக சமீபத்தில் பங்க் குமாரை போலீஸார் தீர்த்துக் கட்டியுள்ளனர். பங்க் குமார் என்கவுண்டர்,தமிழக ரவுடிகளிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸார் தொடர்ந்து ரவுடிகளை ரவுண்டப் செய்து, என்கவுண்டரில் தீர்த்துக் கட்ட முடிவு செய்துள்ளதாக பேச்சுஎழுந்துள்ளது. வெள்ளை ரவி, சின்னா உள்ளிட்ட சில முக்கிய ரவுடிகள் போலீஸ் ஹிட் லிஸ்ட்டில் இருப்பதாகசெய்தி கசிந்துள்ளது.

பங்க் குமாரைப் போலவே வெள்ளை ரவியும் மிக முக்கியமான தாதா. இவன்தான் இப்போது போலீஸின்என்கவுண்டர் பட்டியலில் முதலிடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. கொஞ்ச காலம் அமைதியாக இருந்து வந்தவெள்ளை ரவி, இப்போது சென்னை நகரில் மீண்டும் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்டு வருவதாக போலீஸாருக்குத்தகவல்கள் கிடைத்துள்ளன.

எனவே வெள்ளை ரவிக்கு பால் ஊற்றும் சமயம் வந்து விட்டதாக போலீஸ் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.இதேபோல ரவுடி சின்னாவும் சில்மிஷங்களை தொடர்ந்து செய்து வருகிறான்.

இவர்களை விடப் பயங்கர ரவுடியான மாட்டு சேகரும் ஹிட் பட்டியலில் இருக்கிறான் என்று கூறப்படுகிறது.மாட்டு சேகர், சங்கரராமன் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளி ஆவார். இதேபோலஇன்னொரு பிரபல ரவுடியான சேரா, சென்னையைக் காலி செய்து விட்டு சொந்த ஊரான சிவகங்கைக்கு ஓடிவிட்டானாம். அங்கு மினி பஸ்ஸை வாங்கி ஓட்டிப் பிழைத்து வருவதாகக் கூறப்படுகிறது.

அதே போல மதுரையைச் சேர்ந்த வரிச்சூர் செல்வம், அதிமுக ஆட்சியில் சசிகலா ஆட்களின் பெயரைச் சொல்லிஆடி வந்தான். இப்போது இவனும் உயிர் பயத்தில் இருக்கிறான். தனது மனைவி மூலம் போலீசுக்கு தூது விட்டு,நான் திருந்தி வாழ விரும்புகிறேன் என்று கெஞ்சி வருகிறான்.

அதேபோல காதுகுத்து ரவி என்ற இன்னொரு பிரபல ரவுடியும் பெங்களூரில் போய் இருப்பதாக கூறப்படுகிறது.ரவுடிகள் வேட்டை தொடரும் என மாநகர காவல்துறை ஆணையர் லத்திகா சரண் கூறியுள்ளது ரவுடிகளுக்குபெரும் பயமுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாம்.

பங்க் குமார் கதி தமக்கும் ஏற்பட்டு விடுமோ என்று பயந்து போன பல ரவுடிகள் சத்தம் போடாமல் பதுங்கஆரம்பித்துள்ளனராம். பலர் சென்னையை விட்டே ஓடவும் தொடங்கியுள்ளனராம். மேலும பலர் திருந்தி வாழவிரும்புவதாக போலீசிடம் வந்து கதறியழுத்துவிட்டுப் போய்க் கொண்டுள்ளனர்.

இதற்கிடையே ரவுடிகளின் ஆட்டத்தை கட்டுப்படுத்த போலீஸ் வட்டாரத்திற்கும் சில முக்கிய உத்தரவுகளைஅனைத்து காவல் நிலையங்களுக்கும் ஆணையர் லத்திகா சரணும், கூடுதல் ஆணையர் ஜாங்கிட்டும்பிறப்பித்துள்ளனராம்.

அதன்படி, சம்பந்தப்பட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரவுடிகளை அறவே ஒழிக்க வேண்டும்.ரவுடிகளால் பொது அமைதிக்கும், பொதுமக்களுக்கும் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு அந்தஇன்ஸ்பெக்டர்களே பொறுப்பேற்க வேண்டும் என்பதுதான் அந்த கிடுக்கிப் பிடி உத்தரவாம். இதனால்இன்ஸ்பெக்டர்களும் கூட சற்றே ஆடிப் போயிருப்பதாக கேள்வி.

ரவுடிகளை மட்டும் வேட்டையாடுவதோடு நில்லாமல், ரவுடிகளுக்கு ஆதரவு தரும் அரசியல்வாதிகள்,காவல்துறையினரையும் சேர்த்தே தண்டிக்க வேண்டும் என்ற பேச்சும் கிளம்பியுள்ளது.

மொத்தத்தில் ரவுடிகளுக்கு ஆப்பு வைக்க கையும், துப்பாக்கியுமாக கிளம்பி விட்டது சென்னை போலீஸ். எந்தத்தலை உருளுமோ, எந்தத் தலை தப்புமோ என்பதுதான் இப்போது மக்கள் மத்தியில் நடந்து வரும் சூடானபேச்சு.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X