For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லண்டனில் புதனன்று பாலசிங்கம் உடல் அடக்கம்

By Staff
Google Oneindia Tamil News

லண்டன்:மறைந்த விடுதலைப் புலிகள் இயக்க அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கத்தின்இறுதிச் சடங்குகள் லண்டனில் புதன்கிழமை நடைபெறுகிறது.

Alex Andra Palace
அலெக்சாண்ட்ரா அரண்மனை

கடந்த 30 ஆண்டுகளாக விடுதலைப் புலிகள் இயக்கத்திற்காக பாடுபட்டவரானபாலசிங்கம் புற்று நோயால் கடந்த வியாழக்கிழமை லண்டனில் உள்ள அவரதுஇல்லத்தில் மரணமடைந்தார்.

அவரது இறுதிச் சடங்குகள் புதன்கிழமை அலெக்சாண்ட்ரா அரண்மனையில்நடைபெறவுள்ளது. அன்று காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரைபாலசிங்கத்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அலெக்சாண்ட்ரா அரண்மனையில்வைக்கப்பட்டிருக்கும்.

West Hall empty
வெஸ்ட் ஹால்

வடக்கு லண்டனில், மியூஸ்வெல் ஹில் மற்றும் உட்கிரீன் பகுதிக்கு இடையே இந்தஅரண்மனை அரங்கம் அமைந்துள்ளது. லண்டனின் மிகவும் நவீனமான பல்வேறுநிகழ்ச்சிகளை நடத்தக் கூடிய அரங்கம் இது. 1873ம் ஆண்டு இது திறக்கப்பட்டதுகுறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, பாலசிங்கத்தின் மறைவுக்கு நார்வே அமைதித் தூதர் ஜான் ஹேன்சன்பாயர் இரங்கல் தெரிவித்துள்ளார். நார்வே நாடு தனது நண்பரை இழந்து விட்டதாகபாயர் கூறியுள்ளார்.

Great Hall Empty
கிரேட் ஹால்

பாலசிங்கத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்ச்சி நார்வே தலைநகர் ஓஸ்லோவில்உள்ள தமிழ் ரிசோர்ஸஸ் மற்றும் கன்சல்டேஷன் மையத்தில் நடந்தது.

இதில் கலந்து கொண்ட பாயர், பாலசிங்கத்தின் படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், பாலசிங்கம் மூலமாகத்தான் நான் இலங்கைத்தமிழர்களின் அவல நிலையை முழுமையாக தெரிந்து கொண்டேன்.

bauer with balasingam image
பாலசிங்கம் படத்திற்கு அஞ்சலி செலுத்தும் பாயர்

பேச்சுவார்த்தையின்போது பாலசிங்கம் மேற்கொண்ட உத்திகள், அணுகுமுறைகள்நார்வே தூதுக் குழுவினரைக் கவர்ந்தது. பிரச்சினையை அணுகுவதற்கு எங்களுக்குஅது பெரும் உதவியாக இருந்தது.

அவருக்கு பல நண்பர்கள் இருந்தனர். பாலசிங்கத்தை வெறுத்த யாரையும் தமிழர்கள்மத்தியிலோ அல்லது சிங்களர்கள் மத்தியிலோ நான் கண்டதில்லை.

ஐரோப்பிய கண்டத்தின் பல சிந்தனையாளர்களை நன்கு படித்தறிந்தவர் பாலசிங்கம்.அவர்களை மேற்கோள்காட்டி தமிழர் பிரச்சினை குறித்து என்னுடன் விவாதித்தைப்பார்த்து நான் வியந்து போனேன். ஐரோப்பிய வரலாற்றை அவர் கரைத்துக் குடித்தவர்.

பாலசிங்கத்தின் மறைவின் மூலம் விடுதலைப் புலிகள் முதன்மைஅணுகுமுறையாளரை இழந்துள்ளனர். தமிழ் மக்கள் தங்களது முக்கிய பேச்சாளரைஇழந்துளளனர். நார்வே நாடு தனது முக்கிய நண்பரை இழந்து விட்டது என்றார் பாயர்.

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டுபாலசிங்கத்தை வாழ்த்தி கவிதைகள் படித்தனர்.

மேலும், நார்வே தொழிலாளர் கட்சித் துணைத் தலைவர் இவார் கிறிஸ்டியன்சனும்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாலசிங்கத்தை பாராட்டிப் பேசினார். ஓஸ்லோரநாடாளுமன்ற உறுப்பினராக உள்ள தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த யோகாராஜாபாலசிங்கமும் நிகழ்ச்சியில் பேசினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X