• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

அடடே, என்னே வைகோவின் நேர்மை-கருணாநிதி

By Staff
|

சென்னை:ஒரே நாளில் ஒரே நேரத்தில் திமுக தலைமையுடனும், அதிமுக தலைமையுடனும்தொகுதி பேரம் பேசிய சாமர்த்தியம் வேறு யாருக்கு வரும். அடடா, என்னேவைகோவின் அரசியல் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை, லட்சியத்தில் உறுதி எனமுதல்வர் கருணாநிதி வைகோவை புகழ்ந்துள்ளார்.

இதுதொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

முரசொலி மாறன்தான் எனக்கு ஆசான் என ஒவ்வொரு மேடையிலும் பேசி விட்டு,அந்த மாறன் மறைந்தபோது ஓடி வந்து குடம் குடமாய் கண்ணீர் வடித்து விட்டு,இப்பொழுது 30 ஆண்டுகளுக்கு மேல், நாடாளுமன்றத்தில் பணிபுரிந்த அந்தமாறனுக்கு, சோனியா காந்தி முன்னிலையில் பிரதமர் சிலை திறக்கிறார் என்றதும்;

மாறனுக்கு சிலை எடுக்க அவருக்கு என்ன தகுதி? அவர் சிறைச்சாலைக்குச்சென்றதுண்டா என்று உங்கள் பொதுச் செயலாளர் பேசி வருகிறாரே, இப்படிப்பேசுவது என்ன பண்பாடு? என்று மதிமுக முன்னோடித் தலைவர் ஒருவரைக்கேட்டபோது, அவர் நா தழுதழுக்க என்னிடம் சொன்னார். நீங்கள் கேட்பதுநியாயம்தான். நானே இதை அவரிடம் கேட்டு வருத்தப்பட்டேன்.

சிலை வைப்பது பிடிக்கவில்லை என்றால் சும்மா இருந்து விடலாமே, இதையெல்லாம்பேச வேண்டாமே என்று கூடச் சொன்னேன். ஆனால் அவர் கேட்கவில்லை. அந்தஅம்மா சொன்னதை அப்படியே சொல்ல வேண்டும் என்று நினைத்துச்செயல்படுகிறார்.

அவர் அப்படிப் பதில் அளித்ததும் பாவம், இவர் ஏதோ நாகரீகமாவும்,நியாயமாகவும், மனித நேயத்தோடும், அரசியல் நடத்த விரும்புகிறார் என்று அந்தமுன்னோடித் தலைவரைப் பற்றி எண்ணிக் கொண்டு திருப்தி அடைந்தேன்.

மதிமுகவில் அண்மையில் ஏற்பட்ட குழப்பம், அதற்கு திமுக மீதும், இந்த அரசின்மீதும் பழி போட முயன்று அந்த முயற்சியில் படுதோல்வி அடைந்த படலம்,இவற்றைப் பற்றி எல்லாம் சில விளக்கங்களை சிந்திக்கத் தெரிந்தவர்களுக்காகவும்,சிந்திக்க முடிந்தவர்களுக்காகவும், எழுதிக் காட்ட விரும்புகிறேன்.

மதிமுக என்ற புதுக் கட்சியை ஆரம்பிக்கும் முயற்சியில் முதல் வேலையாகதிமுகவின் தலைமை அலுவலகமான அரும்பாடுபட்டுக் கட்டிய அண்ணாஅறிவாலயத்தையும், திமுக என்ற பெயரையும், திமுக கொடியையும்,

திமுக தேர்தல் சின்னமாம் உதயசூரியன் சின்னத்தையும் கைப்பற்றுவோம் என்றுஎழுதியும், பேசியும், அறிக்கை விடுத்தும் இறுதியாகத் தலைமைத் தேர்தல் கமிஷன்வரை வழக்காடியும் பார்த்து நீதியும், நியாயமும், ஜனநாயக முறைப்படிபெரும்பான்மை ஆதரவும், நம் பக்கம் இருந்ததால் கண்ணீரும், செந்நீரும் சந்திகளப்பலி பல கொடுத்து இந்தக் கழகத்தைக் காத்திட்டோம்.

ஆட்சியில் இருந்த ஜெயலலிதாவை ஆட்சியிலிருந்து இறக்குவதே குறிக்கோள் எனக்கூறி குமரி முனையிலிருந்து சென்னை வரையில் நடைப்பயணம் தொடங்கினார்கள்.பயணம் சென்னையில் முடிந்தபோது தமது முதல் எதிரி ஜெயலலிதாதான் என்றும்அவர் ஆட்சியை அகற்றுவோம் என்றும் சங்கற்பம் செய்தார்கள்.

பின்னர் ஆண்டுகள் சில உருண்டோடி, தேர்தல்கள், அரசியல் திருப்பங்கள், அணிமாற்றங்கள் ஏற்பட்டு விட்டன. மதிமுகவுடன் உறவு எழவே எழதா என்று நம்பிக்கொண்டிருந்த காலகட்டத்தில், அதற்கு மாறாக உறவு நிலை அரும்பிய அந்தக் காலம்இருக்கிறதே;

பொடா என்ற பயங்கர சட்டத்தின் பிடியில் மதிமுக பொதுச் செயலாளரும், மதிமுகமுன்னோடி நண்பர்களும், ஜெயலலிதாவினால் சிறை வைக்கப்பட்டு, வேலூர்சிறையில் அடைக்கப்பட்டார்களே, அதற்குப் பிறகுதான் அந்த கொடியஅடக்குமுறையை கொள்கை ரீதியாக எதிர்த்துக் குரல் எழுப்பியும்,

தானாடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்ற மொழிக்கேற்ப, வேலூர் சிறைக்குதுரைமுருகனை அனுப்பி ஆறுதல் கூறிடச் செய்தேன்.

அதற்குப் பிறகு நானே இரண்டு முறை வேலூர் சென்று காராக்கிரகத்திற்கு வெளியேஇரண்டு நாள் காத்திருந்து பின்னர் நேர் காணலில் சந்தித்ததும், ஆறுதல் கூறியதும்அப்போது சிறை அலுவலகத்தில் வடிக்கப்பட்ட கண்ணீரும் பற்றி அந்த சிறைஅதிகாரிகளைத்தான் கேட்க வேண்டும்.

பொடாவில் கைது செய்யப்பட்டவரை விடுதலை செய்ய வேண்டும் என்பதற்காக ஒருகோடி கையெழுத்துக்கள் திரட்ட முதல் கையெழுத்தாக என் கையெழுத்து இருக்கவேண்டும், இடம் பெற வேண்டும் என்றுதான் தனது கட்சியின் பொதுச்செயலாளருக்காக அந்தக் கட்சியின் அவைத் தலைவரான எல்.ஜியும், மற்றொருதுணை பொதுச் செயலாளரான மல்லை சத்யாவும் என்னிடம் நேரில் வந்து பெற்றுச்சென்றார்கள்.

அதைத் தொடர்ந்து செஞ்சி ராமச்சந்திரன் வீட்டு இல்லத் திருமணத்தில், நான் தலைமைவகித்துப் பேசியபோது, திமுக, மதிமுக இரண்டும் தனித் தனிக் கட்சிகள். இரண்டும்ஒன்றாக இணைய முடியாவிடினும், ஏறத்தாழ கொள்கை, அடிப்படையில், முரண்பாடுஇல்லாத கம்யூனிஸ்ட் கட்சிகளைப் போல, அவை இரண்டும் பல பிரச்சினைகளில்பொதுவாக ஒன்றுபட்டு குரல் கொடுப்பது போல நாமும் அவ்வாறு செயல்படமுடியும், செயல்படலாம் என்றேன்.

அப்போது வேலூர் சிறையில் இருந்தபடி எனது கருத்தை ஆதரித்தும் வரவேற்றும்மதிமுக பொதுச் செயலாளரும் தனது கட்சி ஏட்டில் கருத்து வெளியிட்டார். ஆனால்நான் வெளியிட்ட இந்தக் கருத்தை முழு மனதுடன் ஆதரிக்க முடியாத சிலர்,மதிமுகவில் இருந்த காரணத்தினால், அக்கருத்து மெல்ல மெல்ல இருட்டடிப்புசெய்யப்பட்டு ஏதாவது காரணங்கள்,நொண்டிச் சாக்குகள் கூறப்பட்ட பகையேதிட்டமிட்டு வளர்க்கப்பட்டது.

அதன் விளைவாகதான் திண்டுக்கல் திமுக மாநாட்டில் ஆறாக பெருகிய அவரதுகண்ணீர் விருதுநகர் மாநாட்டில், வீராவேசமாக வீழ்த்துவோம் ஜெயலலிதா ஆட்சியைஎன்று எழுந்த அவரது முழக்கம், திருச்சி மாநில மாநாட்டின்போது திசைதிருப்பப்பட்டு விட்டது.

ஒரே நாளில் ஒரே நேரத்தில் திமுக தலைமையுடனும், அதிமுக தலைமையுடனும்தொகுதி பேரம் பேசிய சாமர்த்தியம் வேறு யாருக்கு வரும். அடடா, என்னே அரசியல்நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை, லட்சியத்தில் உறுதி (அவரது கட்சியின் மூலக்கோஷங்கள்தான் இவை!)

மதிமுகவை அழித்திட கருணாநிதியின் சதியென்றும், கூலிப்படைகளை அனுப்பிஇவர்களின் கூடாரத்திலே அமளி நடத்த முயன்றேன் என்றும் நேரத்துக்கு ஒன்றாகப்பேசுகிறார். நிமிடத்துக்கு ஒன்றாகப் பொய்யுரைக்கிறார்.

நாடாளுமன்றத்தில் பிற்பட்டவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தது கருணாநிதி தான் என்றுபேசினார் எல்.கணேசன். அந்த வரலாற்று உண்மையை சொன்னதற்காக அவர் மீது கோபப்பட்டு நடவடிக்கைஎடுத்திருக்கிறார் வைகோ.

எல்.கணேசன் ஆரம்ப காலம் முதல் திராவிட இயக்கத் தோழர், அண்ணாவின் தம்பி,ஆட்சிக்கு திமுக வந்த பிறகு சுதந்தராவிலிருந்து வந்தவரல்ல அவர், மொழிப் பார்தளபதிகளில் முக்கியமானவர். அவர் அவைத் தலைவர் என்ற முறையில் கூட்டத்துக்குவந்து விடுவாரோ என்ற ஐயப்பட்டில்,

வந்தால் விபரீதம் விளைவிக்கப் போடப்பட்ட திட்டத்தைத் தடுத்து நிறுத்திட எடுத்துக்கொள்ளப்பட்ட முயற்சிகளைத் தவிர வேறு ஏதும் அறியாத என்னையும்,திமுகவையும் வீண் பழிபோட்டு விளம்பரம் தேடுவதில் என்ன பயன்?

இந்த விளம்பரங்களும், விஷப் பொய்களும் விளக்கில் மாட்டிய விட்டில் பூச்சிகளாய்ஆகுமே தவிர, ஆழ வேர் விரிந்து பரந்து நிற்கும் திமுக எனும் ஆலமரத்தை அசைக்கமுடியாது என்ற அறிவிப்பை அறைகூவலாக விடுக்கிறேன்.

பொய்யுரைத்துப் புலம்புபவர்கள் புலம்பட்டும், புழுதி வாரித் தூற்றி அலைபவர்கள்அலையட்டும். அவர்களை மறப்போம், அவர்தம் சகவாசம் அறவே துறப்போம்.நமக்கு வேலை நிரம்ப உள்ளது. ஆட்சிப் பொறுப்பை தந்துள்ள மக்களுக்கு நாம்அளித்துள்ள வாக்குறுதிகளை அடுத்தடுத்து ஒவ்வொன்றாக நிறைவேற்றுவோம் என்றுகூறியுள்ளார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more