For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாடு திருப்பியது இலங்கை அணி-ரசிகர்கள் உற்சாக வரவேற்பு

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:உலக கோப்பை தொடரை முடிந்து கொண்டு நாடு திருப்பியது இலங்கை அணி. கொழும்பு விமான நிலையத்தில் ஏராளமான ரசிகர்கள் இலங்கை வீரர்களை உற்சாகமாக வரவேற்றனர்.

விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் காரணமாக கொழும்புக்கு வரும் விமானங்களை பல நிறுவனங்கள் ரத்து செய்துவிட்டன.

இதனால் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியுற்ற இலங்கை வீரர்கள் லண்டனில் தங்கியிருந்தனர். அங்கிருந்து நேரடியாக கொழும்பு செல்ல எமிரேட்ஸ் விமானத்தில் அவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் எமிரேட்ஸ் நிறுவனம் தனது சேவையை நிறுத்தியதால் கொழும்பு திரும்ப முடியாமல் அவர்கள் லண்டன் ஹோட்டலிலேயே தங்க நேரிட்டது.

Mahela Jayawardena

இதையடுத்து கிரிக்கெட் வீரர்களை தாயகத்திற்கு அழைத்து வர இலங்கை அரசு சிறப்பு ஏற்பாடுகளைச் செய்தது. அதன்படி லண்டனிலிருந்து துபாய் வரை கத்தே பசிபிக் விமானம் மூலம் வீரர்களை அழைத்து வரப்பட்டு, பின்னர் அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் இன்று கொழும்பு விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர்.

அங்கு ஏராளமான ரசிகர்கள் இலங்கை வீரர்களுக்கு உற்சாகமான வரவேற்பு கொடுத்தனர்.

உலக கோப்பை போட்டியில் இறுதி போட்டி வரை முன்னேறிய இலங்கை வீரர்களை திறந்த வேனில் ஊர்வலமாக அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் பலத்த மழை காரணமாக ஊர்வலம் ரத்து செய்யப்பட்டது.

Srilanka team

ஏராளமான இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் கிரிக்கெட் தலைமை அலுவலகத்திற்கு முன்பு திரளாக கூடி இலங்கை வீரர்களுக்கு உற்சாக வரவேற்பை கொடுத்தனர்.

விமான நிலையத்தில் இலங்கை அணியின் கேப்டன் ஜெயவர்த்தனே நிருபர்களிடம் பேசுகையில்,உலக கோப்பை தொடரில் இலங்கை வீரர்கள் அனைவரும் தங்களது திறமையை முழுமையாக வெளிபடுத்தினர்கள். அதனால் தான் இலங்கை அணி இப்போது தரவரிசை பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னோறியுள்ளது என்றார்.

இலங்கை அணியின் அனுபவ வீரரும், அதிரடி பேட்ஸ்மேனுமான சனத் ஜெயசூர்யா கூறுகையில், நாங்கள் இறுதி போட்டி வரை முன்னோறியது பெரும் மகிழ்ச்சியை கொடுத்து என்றார்.

வேகப்பந்து வீச்சாளர் வாஸ் கூறுகையில், உலக கோப்பை இறுதி போட்டியில் நாங்கள் ஆரம்ப விக்கெட்டுகளை விரைவில் இழந்தது தான் எங்கள் தேல்விக்கு முக்கிய காரணம் என்றார்.

விக்கெட் கீப்பர் சங்கக்காரா கூறுகையில், ஆஸ்திரேலியா அணியினர் மிகச் சிறப்பாக விளையாடினர். தொடக்க முதலே அவர்கள் சிறப்பாக விளையாடினர்கள். எங்கள் வீரர்களும் உலக கோப்பை தொடர் முழுவதிலும் சிறப்பாக செயல்பட்டார்கள்.

இறுதி போட்டியில் நானும், ஜெயசூர்யாவும் விளையாடி கொண்டிருந்தபோது ஓவருக்கு 8 ரன் தேவை என்ற இக்கட்டான நேரத்தில் நாங்கள் சில முயற்சியை எடுத்தோம். ஆனால் துரதிஷ்டவசமாக நான் அடித்த பந்து கோச்சாக மாறியது. இதையடுத்து ஜெயசூர்யாவும் ஆட்டமிழந்தது எங்கள் அணிக்கு பின்னடைவை கொடுத்தது என்றார்.

இந்த உலகக் கோப்பை தொருடன் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ள அர்னால்டு கூறுகையில், இந்த உலகக் கோப்பை எனக்கு மறக்க முடியாத ஒரு அனுபவம். எங்கள் வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் இலங்கை அணி தரவரிசையில் 2வது இடத்தில் இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X