For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'கலைஞர்' வந்தும் கலங்காத 'சன்'!

By Staff
Google Oneindia Tamil News


சென்னை:

தமிழ் தொலைக்காட்சிகளில் தொடர்ந்து சன் டிவி முதலிடத்தில், அசைக்க முடியாத இடத்தில் இருந்தாலும் புதிதாகப் பிறந்துள்ள கலைஞர் டிவி அதி வேகத்தில் முன்னேSun TV Logoறி வருகிறது.

10 வருடங்களுக்கு மேலாக சாட்டிலைட் தொலைக்காட்சி ஒளிபரப்பில் முக்கியமான இடத்தை தக்கவைத்த தொலைக்காட்சிகளுள் சன் டிவிக்கு தனிப்பெருமை உண்டு.

பல புதுமைகளைப் படைத்த பெருமை சன் டிவிக்கு இருந்தாலும், இதில் ஒளிபரப்பாகும் பல மெகா தொடர்கள் பலருடைய வீட்டில் குடும்பத் தலைவிகளை அழ வைத்து வேடிக்கைப் பார்த்தன என்பதை யாரும் மறுக்க முடியாது.

தற்போதும் அதே நிலைமை தான் நீடிக்கிறது. குடும்பத் தலைவிகளை மடக்கினால் போதுமா, இளைய தலைமுறையினரை முடக்க என்ன செய்யலாம் என்று யோசித்த சன் நிர்வாகம், பல கேம் ஷோக்களை நடத்தி அவர்களையும் டிவி முன் உட்கார வைத்துவிட்டது.

சினிமா சாராத பல நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக அரங்கேற்றி அசத்தி வந்த விஜய் டிவியைப் பார்த்து சன் டிவியும் விதவிதமான நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தியது. அதேசமயம், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியை அப்படியே காப்பி அடித்து அசத்தப் போவது யாரு என்று அரங்கேற்றியது.

விஜய் டிவியின் வெற்றி பார்முலாவை கொஞ்சம் கூட தயங்காமல் சன் டிவியும் பின்பற்ற ஆரம்பித்தது.

Kalaingar TV Logoஇந்த நிலையில்தான் வந்தது கலைஞர் டிவி. கலைஞர் டிவியின் வரவு தமிழகத் தொலைக்காட்சி வரலாற்றில், புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 'சன்'னே சரணம் என்றிருந்த பலரும் கலைஞருக்கு மெல்ல மெல்ல மாற ஆரம்பித்துள்ளனராம்.

இருப்பினும் தொடர்ந்து சன் டிவியே முன்னணியில் உள்ளது.

கடந்த மாதம் 16ம் தேதியிலிருந்து 22ம் தேதி வரை எடுக்கப்பட்ட ஆய்வில், சன் டிவி தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. டிவி நேயர்களில் 48 சதவீதம் பேருடன், அசைக்க முடியாத இடத்தில் சன் டிவி இருக்கிறது.

2வது இடம் கே டிவிக்குக் கிடைத்துள்ளது (18 சதவீதத்துடன்). 3வது இடத்தில் கலைஞர் டிவி உள்ளது. இதன் நேயர் எண்ணிக்கை 13 சதவீதமாகும்.

தமிழ் தொலைக்காட்சிகளில் முதல் ஐந்து இடங்களில் இருக்கும் நிகழ்ச்சிகள் சன் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் தான்.

கோலங்கள் தொடர் டிவி ரேட்டிங்கில் 21.58 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

ரஜினி நடித்த படையப்பா படம் சன் டிவியில் ஒளிபரப்பானபோது, அதற்கு 19.66 புள்ளிகள் கிடைத்து 2வது இடம் பெற்றது.

ஆனந்தம் 3வது இடத்திலும், அரசி 3வது இடத்திலும், மேகலா 4வது இடத்திலும் உள்ளன.

இந்த நிலையில், கலைஞர் டிவியும் மெகா தொடர்களை ஒளிபரப்ப ஆரம்பித்துள்ளது. பெரிய பெரிய சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் கலைஞர் டிவிக்காக தொடர்கள் தயாரிக்கவுள்ளன.

அண்ணாமலை சினி புரொடக்சன், சிவாஜி புரொடக்சன்ஸ், தமிழ் திரையுலகின் சிறந்த டைரக்டரும், தயாரிப்பாளருமான ஆபாவாணன் புரொடக்சனை சேர்ந்த ஸ்ரீமலர் ஆர்ட்ஸ், பிரமிட் சாய்மீரா நிறுவனம், ஏவிஎம், கே.பாலச்சந்தரின் கவிதாலயா புரொடக்சன்ஸ் மற்றும் மும்பையைச் சேர்ந்த பே எம் நிறுவனம் ஆகியவை கலைஞர் டிவியில் தொடர்களை தயாரிக்கும் நிறுவனங்களாகும்.

இது தவிர இன்னும் பல நிறுவனங்கள் தொடர்களை எடுக்க தயாராக இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவின் பெரிய தயாரிப்பாளர்களில் ஒருவரான ஏ.எம்.ரத்னத்தின் சூர்யா மூவிஸ், கலைஞர் டிவிக்காக புதுமை பெண்கள் என்ற தொலைக்காட்சி தொடரை தயாரித்து வருகிறது.

சன் டிவியை பீட் செய்ய மெகா தொடர் வழியை கலைஞர் டிவியும் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளது.

கலைஞர் டிவியின் கடுமையான முயற்சிகளைப் பார்த்து சன் டிவி நிர்வாகம் கலங்கிப் ேபானதாக தெரியவில்லை. காரணம், சன்னுக்கு உள்ள சாலிட் பேஸ்.

அதை அசைத்துப் பார்க்க தீவிரமாக முயன்று வருகிறது கலைஞர் டிவி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X