For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மைசூரில் தசரா பண்டிகை ஆரம்பம்

By Staff
Google Oneindia Tamil News


மைசூர்:

உலகப் புகழ்பெற்ற தசராMysore palace lit with thousands of light on the eve of Dasara பண்டிகை மைசூரில் மிக விமரிசையாகத் தொடங்கியது.

மைசூரில் சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டேஸ்வரி தாயாரின் கோவிலில் திருவிளக்கு ஏற்றப்பட்டு, சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டு இந்த விழா தொடங்கியது.

ஆதிசுன்சுனகிரி மடத்தின் தலைவர் ஸ்ரீ பாலகங்காதர சுவாமிகள் இந்த பூஜைகள் நடத்தி விழாவை தொடங்கி வைத்தார்.

அதே போல இந்த விழாவையொட்டி மைசூர் அரண்மனையில் மன்னரின் வாரிசு ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார் தங்க நாற்காலியில் அமர்ந்து சிறப்புப் பூஜைகள் நடத்தினார்.

10 நாட்கள் நடக்கும் இந்த விழாவின் கடைசி நாளன்று யானைகள், குதிரைகள் அடங்கிய தசரா ஊர்வலம் நடைபெறும். இதில் யானையின் மீது சாமுண்டீஸ்வரி அம்மன் வலம் வருவார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X