இலவச டிவி கேட்டு கலெக்டரை முற்றுகையிட்ட பெண்கள்
திருநெல்வேலி: நெல்லையில் ரேஷன் கார்டுகள் வைத்திருந்தும் இதுவரை அரசின் இலவச கலர் டிவி கிடைக்காத பெண்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை திடீரென்று முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை, மேலப்பாளையம் சேவை பாரதி அமைப்பாளர் ஆர்.கணேசன் தலைமையில் ஏராளமான பெண்கள் ஆட்சியாளர் அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு ஆட்சியாளரிடம் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில்,
தமிழக அரசு ரேஷன் கார்டுகள் வைத்துள்ள அனைவருக்கும் இலவச கலர் டிவி வழங்கி வருகிறது. நெல்லை மாநகராட்சி 30வது வார்டில் அதிகாரிகள் வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்தாமல் இஷ்டப்படி கலர் டிவி வழங்கியுள்ளனர்.
இதில் வசதி படைத்தவர்கள் பலருக்கு கலர் டிவி வழங்கப்பட்டுள்ளது. மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு கிடைக்கவில்லை.
போலியான முகவரியில் வசிப்பவர்களுக்கு எல்லாம் இந்த பயனை பெற்ற நிலையில் நேர்மையான முகவரியில் குடியிருப்பவர்களுக்கு எந்த பயனும் இல்லை.
அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் செயல்படும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உடனடியாக மாவட்ட ஆட்சி தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இலவச கலர் டிவி வழங்கப்படாத ஏழைகளுக்கு உடனடியாக டிவி வழங்கப்பட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications