For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சவூதியில் நெல்லை வாலிபர் மர்ம சாவு-ஆடு தொலைந்ததால் கொலை?

By Staff
Google Oneindia Tamil News


கடையநல்லூர்: சவூதி அரேபியாவில் வேலை பார்த்து வந்த கடையநல்லூர் வாலிபர் மர்மமான முறையில் இறந்ததாக அவரது உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆடு தொலைந்ததால் அவர் அடித்துக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தூதரகம் முலம் நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடையநல்லூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சவுதி அரேபியா, குவைத், துபாய், பக்ரைன், ஓமன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வேலை செய்து வருகின்றனர்.

இவர்களில் சிலர் மிகவும் மோசமாக நடத்தப்படுகின்றனர். சுமார் 1 லட்சம் ரூபாய் வரை செலவழித்து வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் இவர்களில் பலர் போதுமான சம்பளம், தங்குமிடம் போன்றவை இல்லாமல் மனிதாபிமானமற்ற நிலையில் நடத்தப்படுவதாக அடிக்கடி புகார் எழுந்தது.

ஆடு மேய்த்த பரிதாபம்:

இந்த நிலையில், கடையநல்லூர் அருகே கொமந்தாகுளம் காலனி வடக்குவிளை தெருவைச் சேர்ந்தவர் தனுஷ்கோடி. இவரது மகன் விஸ்வநாதன். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக சவுதி அரேபியா ரியாத் அருகே உள்ள நகருக்கு சென்றார்.

கம்பெனி வேலை என்று அழைத்துச் செல்லப்பட்ட இவர் அங்கு ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டார்.

இவரை வேலைக்கு அமர்த்தியவர் மிகவும் துன்புறுத்தியதாகவும், ஒழுங்காக சம்பளம் வழங்கவில்லை என்றும் கடையநல்லூரில் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு விஸ்வநாதன் போன் முலம் தகவல் தெரிவித்தார்.

எனவே விரைவில் வேலையை ராஜினமா செய்து விட்டு ஊர் திரும்ப முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கிடையே விஸ்வநாதன் வேலை பார்த்த இடத்தில் ஆடு ஒன்று தொலைந்து விட்டதாகவும், அதற்கு விஸ்வநாதன் தான் பொறுப்பு என்று குற்றம் சாட்டி துன்புறுத்தப்பட்டதாகவும் உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது.

இதன் பின்னர் இரண்டு தினங்களுக்கு பின் விஸ்வநாதன் இறந்துவிட்டதாக அவரது குடும்பதினருக்கு தகவல் வந்தது. இதனால் உறவினர்களும், நண்பர்களும் கடும் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் குடும்பமே சோகத்தில் முழ்கியுள்ளது.

இறந்து போனதாக கூறப்படும் விஸ்வநாதனுக்கு முருகாத்தாள் என்ற மனைவியும், 5 வயதில் மகனும், 2 வயதில் மகளும் உள்ளனர்.

விஸ்வநாதனின் மனைவி முருகாத்தாள் தன்னுடைய கணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கடையநல்லூர் தொகுதி எம்எல்ஏ பீட்டர் அல்போன்ஸிடம் மனு கொடுத்துள்ளார்.

தூதரகம் முலமும் உண்மையை கண்டறிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடையநல்லூரில் உள்ள விஸ்வநாதனின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து வெளிநாடு வாழ் இந்தியர்களின் பாதுகாப்பு துறை அமைச்சர் வயலார் ரவியை நேரில் சந்திக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X