For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மொழிப்போர் தியாகிகளுக்கு ஜெயலலிதா வீர வணக்கம்

By Staff
Google Oneindia Tamil News


சென்னை: இந்தி மொழி ஆதிக்கத்துக்கு எதிராக போராடி உயிர் நீத்த தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் வகையில் அதிமுக பொதுக் கூட்டங்கள் நடத்தவுள்ளது.

வழக்கமாக மொழிப் போர் தியாகிகளை எல்லாம் அதிமுக பொதுச் ெசயாலளர் ஜெயலலிதா பெரிய அளவில் கண்டுகொள்ள மாட்டார். ஆனால், இப்போது திடீரென அவருக்கு அவர்களது நினைவு வந்துள்ளது.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து, 1965 ஜனவரி 25ஆம் நாள் தமிழகத்தில் தொடங்கப்பட்ட போராட்டம் உலகம் காணாத ஒரு மாபெரும் புரட்சியாகும்.

அந்தத் தியாக வேள்வியில் இன்னுயிர் துறந்த மொழிப் போர்த் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்துவது நமது விழுமிய கடமையாகும்.

அன்னைத் தமிழுக்காக ஆவி துறந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், வரும் 25ம் தேதி (வெள்ளிக்கிழமை) வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் அதிமுக மாணவர் அணியின் சார்பாக, கழக அமைப்பு ரீதியான மாவட்டத் தலைநகரங்களில் நடைபெற
உள்ளது.

பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ள இடங்கள் மற்றும் அவற்றில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றும் சிறப்புப் பேச்சாளர்களின் பட்டியல், நமது கழக நாளேடான டாக்டர் நமது எம்.ஜி.ஆர். நாளிதழில் இத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

பொதுக்கூட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள இடங்களைச் சேர்ந்த கழக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆங்காங்கே நடைபெற உள்ள வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுவார்கள் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

எம்ஜிஆர் ஓட்டுக்களை வளைத்து வரும் விஜய்காந்த் பயத்தில் 12 வருடமாக எட்டிப் பார்க்காத ராமாவரம் தோட்டத்துக்குப் போனார் ஜெயலலிதா. இப்போது மொழிப் ேபார் தியாகிகள் நினைவும் வந்துவிட்டது.

விஜய்காந்த் முன்னாடியே அரசியலுக்கு வந்திருக்கலாமோ...

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X