For Daily Alerts
Just In
'கஞ்சா': சுதாகரன் கோரிக்கை நிராகரிப்பு!
சென்னை: ஜெயலலிதா ஆட்சியில் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் மீது போடப்பட்ட கஞ்சா வழக்கு மற்றும் கொலை முயற்சி வழக்கு ஆகியவற்றை தள்ளுபடி செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் வி.என்.சுதாகரன். இவர் மீது ஜெயலலிதா ஆட்சியில், கஞ்சா வைத்திருந்ததாக கூறி திடீரென வழக்கு தொடரப்பட்டது. பின்னர் கொலை முயற்சி வழக்கும் இவர் மீது பாய்ந்தது.
இந்த இரு வழக்குகளும் இரு வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும். விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரி சுதாகரன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயபால், சுதாகரன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.