For Daily Alerts
Just In
தென் மாவட்டங்களில் பிஎஸ்என்எல் அவுட்!
தூத்துக்குடி: தென் மாவட்டங்களில் பல இடங்களில் பிஎஸ்என்எல் தொலைபேசி சேவை செயலிந்தது. இதனால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்.
திருநெல்வேலி, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பிஎஸ்என்எல் செல்போன்கள், தொலைபேசிகள், இன்டர்நெட் பிராட்பேண்ட் ஆகிய சேவைகள் பாதிக்கட்டன.
இதனால் பிஎஸ்என்எல்லை சார்ந்த எஸ்டிடி பூத்கள், பிரவுசிங் சென்டர்கள் மூடப்பட்டன. இது குறித்து அதிகாரிகளிடம் வாடிக்கையாளர்கள் கேட்டபோது முறையான பதிலும் வரவில்லை.
நாமும் விசாரித்தோம். விருதுநகரில் தேசிய நெடுஞ்சாலை பணியின் போது பிஎஸ்என்எல் ஆப்டிகல் பைபர் கேபிளில் சேதம் ஏற்பட்டுவிட்டதால் இந்த பிரச்சனை உருவானது என்றனர்.
இந்த பதிலை பொது மக்களுக்கும் சொன்னால் என்ன குறைந்து போய்விடுவார்களோ அதிகாரிகள்.