For Daily Alerts
Just In
தமிழகத்தில் பரவ ஆரம்பித்துவிட்ட 'மெட்ராஸ் ஐ'
சென்னை: வழக்கமாக கோடை காலத்தில் வாட்டி எடுக்கும் மெட்ராஸ் ஐ' கண் நோய் இப்போதே தமிழகத்தின் பல பகுதிகளிலும் பரவ ஆரம்பித்துவிட்டது.
இந்த நோய் வந்தவர்களுக்கு கண்கள் உறுத்தும், வீங்கி சிவக்கும், நீர் வடியும். கிட்டத்தட்ட ஒரு வாரம் வரை இந்த வேதனை தொடரும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் கண் திரவம் எதில் ஒட்டினாலும் அதன் மூலம் அடுத்தவர்க்கும் இந் நோய் பரவும்.
சென்னையில் கடும வெயில் அடிக்க ஆரம்பித்துவிட்டதையடுத்து மெட்ராஸ் ஐ' பரவ ஆரம்பித்துவிட்டது. வட சென்னை பகுதியில் வேகமாக பரவி வருகிறது.
அதே போல வேலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் இந்த நோய் தாக்குதல் தொடங்கியுள்ளது.
பிளஸ் டூ தேர்வுகள் தொடங்கியுள்ள நிலையில் இந் நோய் தாக்குதல் தொடங்கியுள்ளது கவலையான விஷயம்.