For Daily Alerts
Just In
துப்பாக்கிக் கொள்ளையர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது
கோவை: கோவையில் போலீசாரைத் தாக்கி துப்பாக்கிகளைக் கொள்ளையடித்த 3 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவை பாரதி பார்க்கில் கடந்த 22ம் தேதி ரோந்துப் பணியில் ஈடுப்பட்டிருந்த ஆயுதப்படை ஏட்டு துரைசாமி, போலீஸ்காரர் விஜய் ஆனந்த் ஆகியோரை கட்டிப் போட்டுவிட்டு சந்தன மர கடத்தல் கும்பல் அவர்களிடம் இருந்து துப்பாக்கிகளை கொள்ளையடித்துச் சென்றது. இதையடுத்து கொள்ளையர்களைப் பிடிக்க 12 தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படையினர் பாலக்காடு அருகே நாட்டுக்கல் என்ற இடத்தில் பதுங்கி இருந்த கொள்ளையர்கள் ஹாரீஸ், குஞ்சானி, ஷெரீப், ஆகியோரை கைது செய்தனர்.
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் காந்திராஜன் உத்தரவுப்படி துப்பாக்கி கொள்ளையர்கள் 3 பேரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.