For Daily Alerts
Just In
துபாயில் இந்தியக் குழந்தை கொலை
துபாய்: இந்திய தம்பதியின் பெண் குழந்தை துபாயில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டது.
துபாயின் ஹோர் அல் அன்ஸ் பகுதியில் 3 வயது பெண் குழந்தை மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது. ரத்த வெள்ளத்தில் கிடந்த அந்த குழந்தைக்கு அருகே அதன் ஒன்றரை வயது தங்கையும் கத்தியால் குத்தப்பட்டுக் கிடந்தது.
உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அந்த குழந்தையை மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையி்ல் கொலை செய்யப்பட்ட குழந்தை நவுஷா கதீஜா, காயமடைந்த குழந்தையும் கேரளாவைச் சேர்ந்த கம்ப்யூட்டர் இன்ஜினியருடையது என்பது தெரியவந்தது.
சம்பத்தின்போது, குழந்தையின் தாய் வீட்டில்தான் இருந்துள்ளார். குழந்தை எதற்காக, எப்படி கொலை செய்யப்பட்டது என்பது தெரியவில்லை. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.