For Daily Alerts
Just In
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு புரளி
சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. ஆனால் இது புரளி எனத் தெரிய வந்தது.
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இன்று ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், உயர்நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கிறது. இன்னும் சிறிது நேரத்தில் அது வெடிக்கும் என தெரிவித்தார்.
இதையடுத்து நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நீதிபதிகள், வழக்கறிஞர்கள், விசாரணைக்கு வந்தவர்கள் அவசரம் அவசரமாக வெளியேறினர்.
தகவல் அறிந்து போலீஸார் விரைந்து வந்தனர். மோப்பா நாய்கள் சகிதம், வெடிகுண்டு நிபுணர்கள் தீவிரமாக சோதனையிட்டனர். இதில் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை.
இதையடுத்து வெடிகுண்டுத் தகவல் புரளி எனத் தெரிய வந்தது. இந்த பரபரப்பால் நீதிமன்றத்தில் சுமார் ஒரு மணி நேரம் பணிகள் பாதிக்கப்பட்டன.