For Daily Alerts
Just In
மதுரை மாவட்டத்தில் இன்டர்நெட்டில் பிளஸ் ஒன் தேர்வு முடிவுகள்
மதுரை: மதுரை மாவட்டத்தில் பிளஸ் ஒன் தேர்வு முடிகளும் இண்டர்நெட்டில் வெளியிடப்படவுள்ளன.
மதுரை மாவட்டத்தில் 11ம் வகுப்பு தேர்வு விடைத் தாள்கள் திருத்தும் பணி முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்த தேர்வு முடிவுகள் வரும் 29ம் தேதி வெளியாகலாம் எனத் தெரிகிறது.
இந் நிலையில் 11ம் வகுப்பு தேர்வு முடிவுகளை முதன் முறையாக மதுரை மாவட்ட பள்ளிக் கல்வித்துறை இண்டர்நெட்டில் வெளியிடவுள்ளது.
முடிவுகளை http://www.ceomadurai.com/ என்ற இணையத் தளத்தில் காணலாம். இத் தகவலை மதுரை முதன்மைக் கல்வி அதிகாரி பாண்டுரங்கன் தெரிவித்தார்.