For Daily Alerts
Just In
மே 14ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு
சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே மாதம் 14ம் தேதி வெளியாகும் என தேர்வுத் துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தேர்வுத் துறை இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் கூறுகையில்,
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் மே 14ம் தேதி வெளியிடப்படும். அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள்கள் வேலூரில் எரிந்தது. அதனால் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் தள்ளிப் போகாது. கடந்த ஆண்டை போலே மே 31ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றார்.