மதுரை விமான நிலைய பெயரை மாற்றுவோம்-வாண்டையார்
மதுரை: மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை வைக்க வேண்டும். இல்லையென்றால் நாங்களே பெயரை மாற்றுவோம் என்று மூமுக தலைவர் வாண்டையர் தெரிவித்துள்ளார்.
மதுரையில் முத்துராமலிங்க தேவர் சிலையை அவமதித்தை கண்டித்து மூவேந்தர் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஊர்வலம் நடத்தப்பட்டது. பின்னர்அதன் தலைவர் வாண்டையார் கூறுகையில்,
நாட்டின் விடுதலைக்காக தன்னை அர்பணித்துக் சிறை தண்டனை அனுபவித்தவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர். அவரை தெய்வமாக வணங்குகிறோம்.
சித்திரை திருவிழாவின்போது வேண்டும் என்றே அவரது சிலையை அவமதித்துள்ளனர். அதுதொடர்பாக ஒரு மனநோளியை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை விமான நிலையத்திற்கு பசும் பொன் முத்துராமங்க தேவர் பெயர் வைக்க வேண்டும். இல்லையெனில் நாங்களே பெயரை மாற்றுவோம். ஜாதி அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுத்து ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றார்.