தென்மாவட்ட தொழில் முதலீடுகளுக்கு அரசு வரிச் சலுகை
சென்னை: தென் மாவட்டங்களில் ரூ. 50 கோடிக்கும் மேல் முதலீடு செய்தால் வரிச்சலுகை அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சட்டசபையில் தொழில்துறை- தகவல்தொழில்நுட்பத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்குப் பதிலளித்து அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு:
தமிழகத்தில் ரூ.250 கோடிக்கு மேல் முதலீடுகள் செய்யும் உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு வரிச்சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தென் மாவட்டங்களில் ரூ.50 கோடிக்கும் மேலாக முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு பல்வேறு வரிச்சலுகைகள் அளிக்கப்பட உள்ளன.
ரூ.50 கோடிக்கு மேல் ரூ.100 கோடி வரை முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு, அவர்கள் மூன்று ஆண்டுகளில் செலுத்த வேண்டிய மதிப்புக்கூட்டு வரியை, ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பச் செலுத்தும் வகையில் 0.1 சதவீதம் வட்டி வீதத்தில் கடனாக வழங்கப்படும்.
ரூ.100 கோடிக்கு மேல் ரூ.200 கோடி வரை முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு அவர்கள் நான்கு ஆண்டுகள் செலுத்த வேண்டிய வாட் வரியை ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பச் செலுத்தும்வகையில் 0.1 சதவீத வட்டியில் கடனாக வழங்கப்படும்.
ரூ.200 கோடிக்கு மேல் ரூ. 250 கோடி வரை முதலீடு செய்யும் நிறுவனங்கள் ஐந்து ஆண்டு வாட் வரியை ஏழு ஆண்டுகள் கழித்து திரும்பச் செலுத்தும்வகையில் 0.1 சதவீத வட்டியில் கடனாக வழங்கப்படும்.
தற்போது ரூ.250 கோடி முதல் ரூ.1,500 கோடி வரையிலான முதலீடுகளு்ககு வரிச்சலுகைகள் கடனாக வழங்கப்படுகின்றன. தென்மாவட்டங்களுக்குச் சிறப்புச் சலுகையாக அது மானியமாக வழங்கப்படும்.
ஒற்றைச்சாளர முறை:
தொழில் தொடங்குவதற்கு அரசின் பல்வேறு துறைகளிடமிருந்து 10க்கும் மேற்பட்ட அனுமதிகளும், தடையில்லா சான்றுகளும் பெறவேண்டியிருப்பதால் காலதாமதம் ஏற்படுகிறது.
இதை எளிமைப்படுத்தி பல்வேறு துறைகளை ஒருங்கிணைக்கவும், அதன்மூலம் ஒற்றைசாளர முறையில் திட்டங்களுக்கு அனுமதிகளையும் ஒரே இடத்தில் வழங்கவும் சிறப்புச் சட்டம் விரைவில் கொண்டு வரப்படும்.
ஜப்பான், கொரியா, பின்லாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளில் இருந்து இன்னும் அதிக அளவில் முதலீடுகளை ஈர்க்க ஒவ்வொரு நாட்டுக்கும் தனித்தனியே சிறப்புத் தொழிற் பூங்காக்கள் அமைக்கப்படவுள்ளன.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அரசின் இந்த அறி்க்கையால் பொருளாதார மற்றும் தொழில்துறையில் பின்தங்கியுள்ள தென் மாவட்டங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications