For Daily Alerts
Just In
போலி வைரம் கொடுத்து ரு.5000 மோசடி: 3 பேர் கைது
மதுரை: போலி வைரம் கொடுத்து பண மோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை கருப்பாயூரணியை சேர்ந்தவர் கணபதி. மாலைப்பட்டியை சேர்ந்த அழகர்சாமி, பாண்டியன் மற்றும் மதயானை ஆகியோர் கணபதி வீட்டுக்கு வந்தனர்.
தங்களிடம் ரூ.15 லட்சம் மதிப்புள்ள உயர் ஜாதி வைரம் இருப்பதாகவும் ரூ.2 லட்சம் கொடுத்தால் அந்த வைரத்தை தருவதாக கணபதியிடம் ஆசைகாட்டினர். இதை நம்பிய கணபதி முன்பணமாக ரூ.5,000 கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட 3 பேரும் கணபதியிடம் சில வைரங்களை கொடுத்தனர்.
கணபதி, அந்த வைரங்களை தனது நண்பரிடம் காட்டி சோதனை செய்தபோது அது போலி வைரம் என்பது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கணபதி கருப்பாயூரணி போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் வைர மோசடி செய்த அழகர்சாமி, பாண்டியன், மதயானை ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.