For Daily Alerts
Just In
ஏற்காட்டில் கன மழை !
ஏற்காடு: தமிழகத்தை வெப்பம் வாட்டி எடுத்து வரும் நிலையில் ஏற்காட்டில் கன மழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
நேற்று பகலில் அங்கு கடும் வெயில் நிலவியது. இரவில் இடி, மின்னல், என கடும் மழை பெய்தது.
இரவு முழுவதும் பெய்த பலத்த மழையால் சாலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படடது. ஏற்காட்டை சுற்றியுள்ள 60 க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருளில் மூழ்கின. இதனால் மக்கள் இயல்பு வாழக்கை பாதிக்ப்பட்டது.
சுற்றுலா பயணிகள் கடும் அவதிப்பட்டனர். ஏற்காட்டில் 110. 2 மில்லி மீ்ட்டர் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.