'சரவணா': 2 ஊழியர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி
சென்னை: சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்கள் இருவர் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
சரவணா ஸ்டோர்ஸ் பாத்திரக் கடையில் ஏற்பட்ட பெரும் தீவிபத்தில் கோட்டைச்சாமி, ராமஜெயம் ஆகிய இரு ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பல கோடி பொருட்கள் சேதமடைந்தன. இந்த தீவிபத்தால் அருகில் உள்ள லக்கி பிளாசா வணிக வளாகத்தையும் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாம்பலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பாத்திரக் கடை மேலாளர் செல்வம், கண்காணிப்பாளர் ஜெபசிங் ஆகியோரைக் கைது செய்துள்ளனர். கடை உரிமையாளர்களான யோகரத்தினமும், ராஜரத்தினமும் தலைமறைவாகி விட்டனர். அவர்கள் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடியாகி விட்டன.
இந்த நிலையில் செல்வமும், ஜெபசிங்கும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் இன்று நீதிபதி ராமலிங்கம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த சம்பவத்தில் பல விதிமீறல்கள் நடந்துள்ளதாக தெரிகிறது. நிறுவனத்தின் உரிமையாளர்கள் தலைமறைவாக உள்ளனர். எனவே இவர்கள் இருவரையும் ஜாமீனில் விடுதலை செய்தால், வழக்கு விசாரணை பாதிக்கப்படும் என்று வாதிடப்பட்டது.
இதை ஏற்ற நீதிபதி, இருவரது ஜாமீன் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டார்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை












Click it and Unblock the Notifications