மாமனார் வீட்டில் இளம்பெண் எரி்த்துக் கொலை?
கடையநல்லூர்: கடையநல்லூரில் மாமனார் வீட்டில் குழந்தையுடன் வசித்து வந்த இளம் பெண் மர்மமான முறையில் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
கடையநல்லூர் கரியாமணிக்கப் பெருமாள் கீழஅக்ஹாரத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மகன் சுப்பிரமணியன். இவர் சென்னையில் வீடியோ போட்டோகிரபராக உள்ளார். இவரது மனைவி பிருந்தா. இவர்களுக்கு கலாவதி என்ற கைகுழந்தை உள்ளது. அந்த குழந்தையுடன் பிருந்தா மாமனார் வெங்கடாசலம் வீட்டில் வசித்து வந்தார்.
இன்று காலை 7 மணியளவில் வீட்டின் பின்புறம் இருந்து பிணவாடை வீசவே அந்த வழியாக சென்றவர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது இளம்பெண் ஒருவர் உடல் முழுவதும் கருகிய நிலையில் இறந்து கிடந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் கடையநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் பிருந்தாவின் மாமனார், மாமியாரிடம் விசாரணை நடத்தது. அப்போது பிருந்தா வீட்டில் இல்லாததும், குழந்தை மட்டும் இருந்ததும் தெரியவந்தது. இதனால் எரிந்த நிலையில் இறந்து கிடப்பது பிருந்தாதான் என்பது தெரியவந்தது. அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது தெரியவில்லை.
தினமும் அதிகாலையில் பிருந்தா வாக்கிங் செல்வது வழக்கம். இதையறிந்த மர்ம நபர் அவரை பின்தொடர்ந்து வந்து பலாத்காரம் செய்ய முயன்றிருக்கலாம் என்றும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பிருந்தாவை அவர் கொன்று எரித்திருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது. குடும்ப தகராறில் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications