For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஓட்டு போட தயாராகும் 127 வயது வாக்காளர்!

By Staff
Google Oneindia Tamil News

சிம்லா: இந்தியாவின் மூத்த வாக்காளர் என்ற பெருமையை ஹிமாசல பிரதேச மாநிலம் சிம்லா தொகுதியை சேர்ந்த பதாரு என்பவர்பெற்றுள்ளார். அவர் தனது 127வது வரும் வயதில் மே 13ம் தேதி வாக்குப்பதிவு செய்ய ஆர்வமாக இருக்கிறார்.

ஹிமாசல பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் பதாரு. தற்போது அவருக்கு 127 வயதாகிறது. ஆங்கிலேயர் ஆட்சி, இந்தியாவில் ஜனநாயகம் மலர்ந்தது, பண மதிப்பிழந்து போனது, வெயில் அதிகரிப்பு என பலவற்றையும் கண்ட இவர் 19வது, 20வது மற்றும் 21வது என மூன்றாவது நூற்றாண்டில் வாழ்ந்து வருகிறார்.

இப்படி காலம் மாற்றம் வந்த போதிலும், தனக்கு வயது அதிகரித்து கொண்டு போன போதிலும் அவர் இதுவரை ஒருமுறை கூட ஜனநாயக கடமையை தவறவிட்டதில்லையாம். இம்முறையும் அதற்கு தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

அவருக்கு காது கேட்கும் திறனை முழுமையாக இழந்துவிட்டது, கண்கள் இரண்டு கிட்டதட்ட செயலிழந்துவிட்டன. ஆனாலும் தான் ஜனநாயகத்தின் மீதுள்ள நம்பிக்கை இழக்கவில்லை என்கிறார் அந்த 127 வயது பெரியவர்.

அவரது வயதை சிம்லா தேர்தல் அதிகாரி அனில் காச்சியும் உறுத்தி செய்துள்ளார். அவர் கூறுகையில், சிமிலா தொகுதியில் பதாரு, 127 வயது, அப்பா பெயர் கர்மு, என ஒரு வாக்காளர் இருக்கிறார். அவரது வாக்கு எண் 226. அவர் கசும்பதி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட 35வது வாக்குச்சாவடியி்ல் ஓட்டளிக்க இருக்கிறார் என்றார் அவர்.

தேர்தல் ஆணையத்தின் ஆவணங்கள் படி அவருக்கு வயது 127 என்றாலும் அவர் தான் 150 வசந்த காலத்தை கண்டிருப்பதாகவும் அதனால் தனக்கு 150 வயதாவதாகவும் கூறி வருகிறார்.

இது குறித்து ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில்,

இம்முறையும் ஒட்டு போடுவேன். 1952 முதல் தொடர்ந்து ஓட்டுபோட்டு வருகிறேன். அப்போது நேரு இருந்தார். முன்பு ஒருமுறை காந்தி சிம்லா வந்திருந்தார். அப்போது நாங்கள் அவரை காண நடந்தே சென்றோம்.

தற்போது சிம்லாவில் இருந்து 60 கிமீ., தூரத்தில் உள்ள எங்கள் கிராமத்துக்கு மோட்டார் வாகனம் செல்லும் வகையில் சாலை போட்டிருக்கிறார்கள். ஹிமாசல பிரதேசம் வரண்டு விட்டது. இப்படியே தொடர்ந்தால் எப்படி பயிர் விளையும் என்றார்.

அவரது குழந்தைகள் அனைவரும் இறந்துவிட்டனர். தற்போது அவரை அவரது பேரன் மற்றும் அவர்களது பிள்ளைகள் கவனித்து வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X