For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் கட்சிகள் பெற்ற வாக்குகள் சதவீதம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் 39 இடங்களில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர்கள் 10.1 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

மக்களவைத் தேர்தலில் தமிழகம் முழுவதும் மொத்தம் 3,38,83,049 வாக்குகள் பதிவாயின.

இதி்ல் கட்சிகள் பெற்றுள்ள வாக்குகள் சதவீதம்:

திமுக-25.1%
அதிமுக-22.89%
காங்கிரஸ்-15.03%
தேமுதிக-10.1%
பாமக-5.7%
மதிமுக- 3.66%
இந்திய கம்யூனிஸ்ட்- 2.85%
பாஜக- 2.34%
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்- 2.2%
பகுஜன் சமாஜ்- 0.77%
லோக் ஜன் சக்தி- 0.11%
சமாஜ்வாடி கட்சி- 0.08%
ஜார்க்ண்ட் முக்தி மோர்ச்சா- 0.02%
ஐக்கிய ஜனதா தளம்- 0.02%
சுயேச்சைகள், மற்றவர்கள்-9.11%

தேமுதிகவின் வளர்ச்சி...:

தமிழகத்தில் மொத்தம் பதிவான வாக்குகளில் தேமுதிக 30,72,881 வாக்குளைப் பெற்றுள்ளது. இது கடந்த 2006 சட்டமன்றத் தேர்தலில் அந்தக் கட்சி பெற்ற 8.33 சதவீதத்தை விட சுமார் 2 சதவீதம் அதிகமாகும்.

புதுச்சேரியில் தேமுதிக 55,212 வாக்குகளைப் பெற்றுள்ளது. தமிழகத்தில் இக் கட்சியின் வேட்பாளர்களில் 9 பேர் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

இந்த 10 சதவீத ஓட்டுக்கள் 25 தொகுதிகளில் எல்லா கட்சிகளின் வெற்றியையும் பாதித்தித்துள்ளது.

தேமுதிக பிரித்த வாக்குகளால் அதிமுக தான் அதிகபட்சமாக 8 இடங்களில் தோற்றுள்ளது. அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சிக்கு 7 இடங்களிலும், மதிமுகவுக்கு 2 இடங்களிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 இடங்களிலும், மதிமுகவுக்கு (வைகோ உள்பட) 2 இடங்களிலும், விடுதலைச் சிறுத்தைகள் 1 இடத்திலும் பாஜக 1 இடத்திலும் தோற்றுள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X