For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கை: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனை

By Staff
Google Oneindia Tamil News

UN Security Council
நியூயார்க்: இலங்கையில் நிலவரம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனுடன் வெள்ளிக்கிழமை விவாதிக்கவுள்ளனர். ஆனால், இது அதிகாரப்பூர்வமற்ற ஆலோசனையாகும்.

இத் தகவலை ஐ.நாவுக்கான துருக்கியின் தூதர் பகி இல்கின் தெரிவித்தார். 15 நாடுகள் அடங்கிய ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பு இப்போது துருக்கியிடம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை தனது விஷேச தூதர் விஜய் நம்பியாரின் உதவியோடு பான் கி மூன் அமுக்கப் பார்த்த விவகாரம் வெடித்துள்ள நிலையில் இக் கூட்டம் நடப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

தலையிடக் கூடாது-சீனா:

இந் நிலையில் இலங்கை விவகாரத்தில் அண்டை நாடுகளோ, சர்வதேச சமுதாயமோ தலையிடக் கூடாது என்று சீனா மீண்டும் கூறியுள்ளது.

உள்நாட்டுப் பிரச்சனையை இலங்கை அரசே கவனித்துக் கொள்ளும். சர்வதேச சமுதாயம் வேண்டுமானால் இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளைத் தரலாம் என்று சீன வெளியுறவுத்துறை துணை அமைச்சர் கூறியுள்ளார்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் 5 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளனர். அதில் சீனாவும் ஒன்று. இந்த நாடுகளிக்கு வீடோ அதிகாரம் உண்டு. அதன்படி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் எடுக்கப்படும் எந்த முடிவையும் வீடோ அதிகாரத்தைக் கொண்டு சீனாவால் ரத்து செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கவுன்சிலில் உள்ள மற்ற 10 நாடுகள் சுழற்சி முறையில் தாற்காலிக உறுப்பினர்களாகவே இருக்க முடியும்.

ஐ.நா. அகதிகள் ஹை கமிஷன் நடவடிக்கை:

இந் நிலையில் சுமார் 3 லட்சம் ஈழத் தமிழர்கள் வீடு,வாசலை இழந்து சொந்த மண்ணில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் வெறும் 40 அவசர உறைவிடங்கள் அமைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதாவது சராசரியாக 1 உறைவிடத்தில் சுமார் 7,500 மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஐ.நா. அகதிகளுக்கான ஹை கமிஷன் இந்த மக்களுக்க அவசரகால அடிப்படையில் 9,000 உறைவிடங்களையும், சுமார் 14,000 டென்ட்டுகளையும் அமைத்து வருகிறது.

மேலும் அவர்களை தங்களது சொந்த வீட்டுக்கு திருப்பி அனுப்பவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X