For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பி.இ. மாணவர் சேர்க்கை: சென்னைக்கு முதலிடம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்திலேயே பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ள மாணவ, மாணவர்களில் சென்னைக்காரர்கள்தான் அதிக அளவில் சேர்ந்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள 440 அரசு, அரசு உதவி பெறும் சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகளில் மொத்தம் உள்ள இடங்களில் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 102 மாணவர் இடங்கள் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்பபடுகின்றன.

இந்த ஆண்டு கவுன்சிலிங் மூலம் 83 ஆயிரத்து 552 இடங்கள் நிரம்பியுள்ளன. மீதம் உள்ள இடங்களுக்கு ஆள் சேரவில்லை.

தமிழகத்தைப் பொறுத்தவரை காஞ்சிபுரம் மாவட்டத்தில்தான் - தலைநகர் சென்னையில் அல்ல - அதிக அளவில் பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இங்கு மட்டும் 71 கல்லூரிகள் உள்ளன. கிட்டத்தட்ட இவை பெரும்பாலும் சுய நிதி பொறியியல் கல்லூரிகள்தான். காஞ்சிபுரம் மாவட்டம் என்றாலும் கூட சென்னை புறநகர்ப் பகுதிகளில்தான் இவற்றில் 90 சதவீத கல்லூரிகள் உள்ளன.

இந்த கல்லூரிகளில் உள்ள மொத்த மாணவர் இடங்கள் 19 ஆயிரத்து 938 ஆகும்.

சென்னை நகரில் 6 கல்லூரிகள் மட்டுமே உள்ளன. இவற்றில் 1990 இடங்கள் உள்ளன.

தமிழகத்தில் அதிக அளவிலான பொறியியல் கல்லூரிகளைக் கொண்ட 2வது மாவட்டம் கோவையாகும். இங்கு 54 கல்லூரிகள் உள்ளன. அடுத்து திருவள்ளூரில் 38 கல்லூரிகள், நாமக்கலில் 30 கல்லூரிகள், கன்னியாகுமரியில் 25, திருச்சியில் 23 கல்லூரிகள் உள்ளன.

மதுரை உள்ளிட்ட இடங்களில் இவற்றை விட குறைவான அளவிலேயே பொறியியல் கல்லூரிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் உள்ள மொத்த இடங்களில் 99.95 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன. கோவை, கிருஷ்ணகிரி, மதுரை, நீலகிரி, திருவள்ளூர் மாவட்டங்களில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட இடங்கள் நிரம்பின. காஞ்சீபுரம் மாவட்டத்தில் 79.16 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன.

ஆனால் தர்மபுரி, கன்னியாகுமரி, நாமக்கல், சேலம், திருநெல்வேலி ஆகிய 5 மாவட்டங்களில் மொத்த இடங்களில் 60 சதவீதத்திற்கும் குறைவாகவே என்ஜினீயரிங் சீட்டுகள் நிரம்பியுள்ளன.

கவுன்சிலிங்கில் விண்ணப்பித்தவர்களில் 12 ஆயிரத்து 120 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். இதனால் மற்ற மாவட்டங்களை விட சென்னையை சேர்ந்த மாணவர்கள்தான் அதிக அளவில் என்ஜினீயரிங் படிப்பில் சேர்ந்துள்ளனர். சென்னையை சேர்ந்த 6539 பேர் பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ளனர்.

அடுத்த இடம் கோவைக்கு. கோவையை சேர்ந்த 4798 மாணவர்களும், சேலத்தை சேர்ந்த 4172 மாணவர்களும், வேலூரை சேர்ந்த 4172 மாணவர்களும் சேர்ந்துள்ளனர்.

நீலகிரிக்குக் கடைசி இடம்...

பெரம்பலூர் மாவட்டத்தில் 906 பேரும் என்ஜினீயரிங் படிப்பில் சேர்ந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் விண்ணப்பித்த 979 பேரில் 688 பேர் சேர்ந்துள்ளனர். இது மற்ற மாவட்டங்களை விட மிகக் குறைவாகும்.

பி.பார்ம், நர்சிங் கவுன்சிலிங் தொடக்கம்...

இதற்கிடையே, அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பி.பார்ம், பிசியோதெரபி, நர்சிங் படிப்புக்கான கவுன்சிலிங் இன்று தொடங்கியது.

கவுன்சிலிங் மூலம் மொத்தம் 5700 இடங்கள் நிரப்ப்படவுள்ளன.

தமிழ்நாட்டில் 3 அரசு மருத்துவக்கல்லூரிகளில் 103 பி.எஸ்சி. நர்சிங் இடங்கள், 125 தனியார் கல்லூரிகளில் 3403 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன.

இதேபோல 2 அரசு கல்லூரியில் 1133 பி.பார்ம் இடங்கள், தனியார் கல்லூரிகளில் 1177 இடங்கள் உள்ளன.

பிசியோதெரப்பியில், 2 அரசு கல்லூரியில் உள்ள 50 இடங்களும், 25 தனியார் கல்லூரியில் உள்ள 765 இடங்கள் என மொத்தம் மொத்தம் 5705 இடங்கள் கவுன்சிலிங் மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.

இதற்கான கலந்தாய்வு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இன்று தொடங்கியது. 22-ந்தேதி வரை கலந்தாய்வு நடக்கிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X