For Daily Alerts
Just In
தடை நீங்கியதால் குஜராத்தில் குவியும் ஜஸ்வந்த் நூல்
டெல்லி: அகமதாபாத் உயர்நீதிமன்றம் தடையை நீக்கியதைத் தொடர்ந்து, ஜின்னா குறித்தும், இந்தியப் பிரிவினை குறித்தும் ஜஸ்வந்த் சிங் எழுதிய நூல்கள் பெருமளவில் குஜராத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 24 மணி நேரத்தில் 5000 பிரதிகளை புத்தக வெளியீட்டாளர்கள் அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வெளியீட்டாளரான ரூபா அன்ட் கம்பெனியின் தலைவர் ஆர்.கே.மெஹ்ரா கூறுகையில், ஜஸ்வந்த் சிங் எழுதிய 'Jinnah: India, Partition, Independence' நூலுக்கு நல்ல கிராக்கி உள்ளது. குறிப்பாக குஜராத்தில் பெரும் கிராக்கி நிலவுகிறது. இதனால் அங்கு தற்போது 5000 பிரதிகளை அனுப்பி வைத்துள்ளோம்.
பரோடா, அகமதாபாத் மற்றும் பிற நகரங்களுக்கு இந்த நூல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
டெல்லியிலிருந்து 1000 பிரதிகளை விமானம் மூலமாகவும், மும்பையிலிருந்தும் அனுப்பி வைத்துள்ளோம் என்றார் மெஹ்ரா.