புலிகள் ஓயவில்லை-தாக்கலாம்: போலீஸ் தலைவர் எச்சரிக்கை

விடுதலைப் புலிகளிடம் இருந்து வரக்கூடிய அச்சுறுத்தல் இன்னமும் 100 வீதமும் வெற்றி கொள்ளப்படவில்லை. அவர்கள், கிழக்கில் தாக்குதல்களை நடத்தக்கூடிய சாத்தியம் உண்டு என்று அவர் கூறியுள்ளார்.
இன்னும் இயங்கும் விடுதலைப் புலிகள்...
கிழக்கு மாகாணத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் பேசுகையில்,
விடுதலைப் புலிகளிடம் இருந்து வரக்கூடிய அச்சுறுத்தல் இன்னமும் 100 வீதமும் வெற்றி கொள்ளப்படவில்லை. மே மாதத்தில் விடுதலைப்புலிகள் ராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டாலும் அவர்களில் பலர் எஞ்சி உள்ளனர். இயங்குகின்றனர்.
ஒளிந்திருக்கிறார்கள்..
குறிப்பாக இந்தப் பிரதேசங்களில் ஒளிந்து இருக்கிறார்கள். அவர்கள் சாதாரண வேலைகளில் ஈடுபடுவது போல நடித்துக் கொண்டிருக்கிறார்கள். தாக்குதல்களை நடத்தக்கூடிய சாத்தியமும் உண்டு.
விடுதலைப் புலிகள் அமைப்பின் எஞ்சியுள்ள உறுப்பினர்கள் ரகசியமான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் அச்சுறுத்தல் தொடர்கிறது. எனவே மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.
பொதுமக்கள் சட்டம் ஒழுங்கைப் பேண போலீஸாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.
கருணா தேசிய வீரராம்!:
இதற்கிடையே விடுதலைப் புலிகளை தோற்கடிக்க வழிகாட்டிய கருணா தேசிய வீரராக கருதப்பட வேண்டும் என ஆளும் கட்சியின் காலி மாவட்ட எம்.பி. சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
முரளிதரனின் வழிகாட்டுதல்களும், அறிவுரைகளும் ராஜபக்சேவுக்கு கிடைக்கப் பெறாவிட்டால் விடுதலைப் புலிகளை தோற்கடிக்கப்பதில் சிக்கல் நிலை உருவாகியிருக்கும் எனவும் அவர்.
மேலும், வரலாற்று சிறப்பு மிக்க ராணுவ வெற்றிகளை ஈட்டுவதற்கு கருணா வழங்கிய பங்களிப்பு அளப்பரியதெனவும் அவர் பாராட்டியுள்ளார்.