பாதுகாப்புக்காக சென்னை விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்ட சந்திரிகா
சென்னை: கேரளா சென்று விட்டு கொழும்பு திரும்பும் வழியில் பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னை விமான நிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டார் முன்னாள் இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா.
சந்திரிகா தனிப்பட்ட பயணமாக கேரள மாநிலம் கொச்சிக்குச் சென்றார். பின்னர் அங்கிருந்து கொழும்பு செல்வதற்காக சென்னை வந்தார்.
ஆனால் பாதுகாப்பு நிமித்தம் காரணமாக அவர் ஹோட்டலில் தங்க வைக்கப்படவில்லை. மாறாக, விமான நிலையத்திலேயே அவர் தங்க வைக்கப்பட்டார். கிட்டத்தட்ட 2 மணி நேர காத்திருப்புக்குப் பின்னர் சந்திரிகா கொழும்பு செல்லும் விமானத்தி்ல் கிளம்பிச் சென்றார்.
முன்னதாக சந்திரிகா தங்குவதற்காக ஹோட்டல் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களால் எதிர்ப்பு போராட்டங்கள் மேற்கொள்ளப்படலாம் என உளவுத்துறை எச்சரித்ததால் அவர் விமான நிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டார்.