மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல்-அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
சென்னை: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் இரண்டு அதிமுக வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் அதிமுக மீண்டும் முதன் முறையாக தேர்தலில் போட்டியிட இருக்கிறது.
சமீபத்தில் தமிழகத்தில் நடந்த 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை புறக்கணித்த அதிமுக, அடுத்த மாதம் 13ம் தேதி மகாராஷ்டிராவில் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலில் போட்டியிட போவதாக அறவித்துள்ளது.
இது தொடர்பாக இரண்டு வேட்பாளர்களின் பெயர்களையும் வெளியி்ட்டுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் பொதுசெயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை,
அதிமுக ஆட்சி மன்ற குழு முடிவின்படி வரும் 13.10.2009 மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் கீழ்கண்டவர்கள் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக நிறுத்தப்படுகிறார்கள்.
1. மலட் மேற்கு - சூசைராஜ் பி.செட்டி.
2. சயன் கோலிவாடா - எஸ்.ராமநாதன்
என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது