For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

யுஎஸ்: குண்டுவெடிப்புக்கு திட்டமிட்ட 3 அல்-கொய்தா தீவிரவாதிகள் கைது

By Staff
Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவில் மீண்டும் ஒரு குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு திட்டமிட்ட அல்-கொய்தா அமைப்புக்கு நெருக்கமான மூன்று ஆப்கானிஸ்தானியர்களை அந்நாட்டு போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் மேலும் பலரை தேடி வருகின்றனர்.

அல்-கொய்தா தீவிரவாதிகள் செப்டம்பர் 11 போல் மீண்டும் ஒரு குண்டுவெடிப்பு திட்டத்துக்கு திட்டமி்ட்டு வருவதாக அமெரிக்காவின் உளவு பிரிவான எப்பிஐக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவர்கள் சமீபத்தில் நியூயார்க் நகரில் சல்லடை போட்டு தேடினர். அப்போது அவர்கள் நபிபுல்லா ஜசி என்ற 24 வயது இளைஞரை மடக்கி பிடித்தனர்.

இது குறித்து எப்பிஐ அதிகாரிகள் கூறுகையில்,

ஜசி சமீபத்தில் பாகிஸ்தான் சென்று திரும்பியதில் இருந்து அவரது நடவடிக்கைகளில் ஏதோ மாறுதல் இருப்பதாக உணர்ந்தோம். இதையடுத்து அவரை ரகசியமாக பின்தொடர்ந்தோம்.

அவர் கடந்த ஆண்டு பாகிஸ்தானில் அல்-கொய்தா முகாமில் ஆயுதம் மற்றும் வெடிகுண்டு பயிற்சி பெற்றுள்ளார். ஆப்கானிஸ்தானில் பிறந்து பாகிஸ்தானில் வளர்ந்த இவர் இந்த ஆண்டு செப்டம்பர் 11ம் தேதிக்கு முன்னதாக கொலரடோ நகருக்கு சென்று சிலருடன் ரகசிய கூட்டங்கள் நடத்தியுள்ளார்.

இதையடுத்து கொலரடோவில் அதிரடி சோதனை நடத்திய எப்பிஐ போலீஸார் ஜசியின் தந்தை முகமது வலி ஜசி (53), நியூயார்க் நகரில் வசிக்கும் அகமது வைஸ் அப்சலி (37) ஆகியோரை கைது செய்தனர்.

அப்சலி, நியூயார்க் நகரில் உள்ள குயின்ஸ் மசூதியின் இமாம் ஆக இருக்கிறார். அவர் போலீஸ் இன்பார்மராகவும் சில காலம் இருந்துள்ளார். சமீபத்தில் அவர் ஜசி மற்றும் அவரது தந்தையிடம் தொலைபேசியில் பேசும் போது தனது தொலைபேசியை எப்பிஐ பதிவு செய்வதாக தெரிவித்துள்ளார்.

மேலும், ஜசியை போலீசார் மறைமுகமாக தொடர்ந்து வருவதாகவும், அவரை பற்றி தன்னிடம் தகவல் கேட்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அவர்கள் ரயில் நிலையங்கள் அல்லது மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி ஒன்றில் வெடிகுண்டு வைக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால், எங்கு, எப்போது அவர்கள் குண்டுவைக்க திட்டமிட்டனர் போன்ற தகவல்கள் கூறமுடியாது.

ஜசியின் லேப்டாபில் சோதனையிட்ட போது சில தீவிரவாதிகளின் புகைப்படங்கள் இருந்தது. வெடிகுண்டு தயாரிப்பது எப்படி, அவற்றை பொருத்துவது எப்படி என்பது தொடர்பாக 9 பக்கத்துக்கு குறிப்பு ஒன்று கிடைத்தது. இதை அவர் தனது கைப்பட எழுதியுள்ளார்.

அவரிடம் இருந்து வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் சில எலக்ட்ரானிக் உபகரணங்களை பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் இவர்கள் மூவருடன் தொடர்புடைய பலரை தேடி வருகிறோம். ஆனால், அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. அவர்கள் கொலரடோ அல்லது வேறு மாநிலத்தில் இருக்கலாம் என்றனர்.

இந்நிலையில் ஜசியும், அவரது தந்தையும் நேற்று மதியம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அப்போது ஜசி, நீதிபதியிடம் நான் தனக்கு சொந்த நாட்டில் இருந்து வக்கீல் வேண்டும் என தற்போது கேட்கபோவதில்லை. ஆனால், விரைவில் கேட்கலாம் என்றார்.

அதேபோல் கைது செய்யப்பட்ட அப்சலியும் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார். இஸ்லாமிய கலாசார உடையில் வந்த அவர் நீதிமன்றத்தில் இருந்த தனது உறவினர்களை பார்த்து முத்தங்களை பறக்கவிட்டவரே வந்தார்.

இவர்களை வரும் 24ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X