For Daily Alerts
Just In
மக்களிடம் மன்னிப்பு கேட்டார்-தொகுதிக்கு வராத சித்து!
அமிர்தசரஸ்: மூன்று மாதங்களாக தொகுதிக்கு பக்கமே தலைவைத்து படுக்காமல் இருந்த முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்.பியுமான சித்து அமிர்தசரஸ் மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் தொகுதியில் இருந்து பாஜக சார்பில் வெற்றி பெற்ற சித்து, கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தொகுதிக்கு வராமல் இருந்தார்.
இதையடு்த்து காங்கிரஸ் கட்சியினர் சித்துவை காணவில்லை என ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டினர். மேலும், அவரை தொலைந்து போய்விட்டதாக போலீஸில் புகார் கொடுத்தனர்.
இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க சித்து, அமிர்தசரஸ் வந்தார். அவர்கள் மக்களையும், கட்சி தொண்டர்களையும் சந்தித்து தொகுதி பக்கம் வர முடியாமல் போனதற்கு மன்னிப்பு கேட்டார். மேலும், கட்சி பணிகள் அதிகமிருந்ததால் வர முடியாமல் போனதாக தெரிவித்தார்.