கருணாநிதியைக் கண்டித்து போஸ்டர்கள் - பரபரப்பு

Subscribe to Oneindia Tamil
Poster
மதுரை: விடுதலைப் புலிகள் தொடர்பாக முதல்வர் கருணாநிதி தெரிவித்த கருத்துக்களுக்குக் கண்டனம் தெரிவித்து தமிழகத்தின் சில பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விடுதலைப் புலிகள் இயக்கம் அரசியல் கண்ணோட்டத்துடன் செயல்படவில்லை. அதனால்தான் இன்று நாடு நாடாக இலங்கைத் தமிழர்கள் அலையும் நிலை ஏற்பட்டு விட்டது என்று முதல்வர் கருணாநிதி, யாருக்குத் தெரியும் இந்த மெளன வலி என்ற தலைப்பில் முரசொலியில் எழுதியிருந்தார்.

இந்த நிலையில் முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் தமிழின உணர்வாளர்கள் என்ற பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், ஈழ விடுதலைப் போரை கொச்சைப்படுத்தும் கலைஞரே, உங்கள் அறிக்கை மெளனத்தின் வலியா, துரோகத்தின் மொழியா என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

தமிழின உணர்வாளர்கள், மதுரை என்ற பெயரில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. போஸ்டரில் பெரியார் படமும் இடம் பெற்றுள்ளது.

இந்தப் போஸ்டர்களை பெரியார் தி.க. அல்லது நாம் தமிழர் அமைப்பினர் ஒட்டியிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்த போஸ்டர்களை போலீஸார் உடனடியாக அகற்றி விட்டனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...