பாதிரியாரின் செக்ஸ் தொல்லை-உடன்பட வலியுறுத்தும் கணவர் குடும்பத்தார்-பெண் புகார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருச்சி: வேலை பார்க்கப் போன இடத்தில் பாதிரியார் செக்ஸ் வைத்துக் கொள்ள வற்புறுத்துகிறார். இதுகுறித்து கணவர், மாமனார், மாமியாரிடம் கூறினால் அதற்கு உடன்பட வற்புறுத்துகின்றனர். கூடுதலாக வரதட்சணை கேட்டும் கொடுமைப்படுத்துகின்றனர் என்று திருச்சி பெண் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

திருச்சி சுப்பிரமணியபுரம் காந்திநகரைச் சேர்ந்தவர் லாசர். அவரது மகள் பாரதி என்ற எஸ்தர் (19). கடந்த 24.2.10 அன்று தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் மாரநாதா சபையில் பாலாஜி என்ற மனோபாவுக்கும் (29), பாரதிக்கும் திருமணம் நடந்தது.

இத்தனைக்கும் பாரதி, பாலாஜிக்கு சொந்த அத்தை மகள் ஆவார். திருமணத்தின்போது தனது மகளுக்கு சீர் வரிசையாக, ரூ. 1 லட்சம் ரொக்கம், ரூ. 50 ஆயிரத்துக்கு சீர் வரிசை பொருட்களையும் கொடுத்தார் லாசர்.

திருமணத்திற்குப் பின்னர் போடிநாயக்கனூரில் குடித்தனத்தை ஆரம்பித்தனர் பாரதியும், பாலாஜியும். ஆனால் பாலாஜிக்கு குடும்ப வாழ்க்கையிலும், தாம்பத்யத்திலும் ஈடுபாடு இல்லை. இதனால் பாரதி மனம் உடைந்தார்.

மனைவியிடம் சரியாக பேசுவதும் இல்லையாம் பாலாஜி. இதுபோதாதென்று பாலாஜியின் பெற்றோர் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்த ஆரம்பித்தனர்.

இந்த நிலையில், போடி நாயக்கனூர் மாரநாத சபையில் பைபிள் படிப்புக்கு, ஆசிரைய வேலைக்கும் செல்ல வற்புறுத்தினர். இதையடுத்து கடந்த மே மாதம் 3ம் தேதி முதல் 7ம் தேதி வரை அப்பணிக்குச் சென்றுள்ளார் பாரதி.

அந்த நாட்களில் அங்கிருந்த பாதிரியார் டேவிட் புஷ்பராஜ் (இவருக்கு வயது 55 என்பது குறிப்பிடத்தக்கது) என்பவர் பாரதியை வற்புறுத்தி ஆபாச சிடிக்களைப் போட்டுப் பார்க்கக் கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த பாரதி, இதுகுறித்து தனது மாமியாரிடம் கூற அவரோ, அதைக் கண்டு கொள்ளவே இல்லையாம்.

இதை எதிர்பாராத பாரதி, கணவரிடம் முறையிட்டுள்ளார். அவரோ, பாதிரியார் சொல்படி நடந்து கொள் என்று கூற மேலும் அதிர்ச்சியாகியுள்ளது பாரதிக்கு.

அடுத்த அதிர்ச்சியாக, என் இஷ்டப்படி நீ நடக்கவில்லை. இனியும் நீ இங்கு இருக்கக் கூடாது. வாழ வேண்டும் என விரும்பினால், ரூ. 50 ஆயிரம் ரொக்கம் மற்றும் 10 பவுன் நகையை வாங்கி வா என்று கூறியுள்ளார் பாலாஜி.

இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார் பாரதி. தந்தை லாசர் உடனடியாக விரைந்து வந்து சம்பதியிடம் இதுகுறித்துப் பேசியுள்ளார். ஆனால் அவர்களோ சரியாக பேசவில்லையாம். இதையடுத்து மகளை வீட்டுக்குக் கூட்டி வந்து விட்டார் லாசர்.

இந்த நிலையில், 30.6.10 அன்று திருச்சி மண்டல போலீஸ் ஐ.ஜி.யை நேரில் சென்று சந்தித்து பாரதி புகார் மனு அளித்தார்.

அதில், எனது கணவர் பாரதி தாம்பத்திய உறவில் விருப்பம் இல்லாமல் இருந்து வருகிறார். பாதிரியார் டேவிட் புஷ்ப ராஜ் என்னிடம் அடிக்கடி செக்ஸ் தொல்லை கொடுத்து வருகிறார். இதற்கு எனது மாமனார், மாமியார், கணவர் ஆகியோர் உடந்தையாக உள்ளனர். அடிக்கடி பணம்- நகை கேட்டு சித்ரவதை செய்து வருகின்றனர் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து கன்டோன்மென்ட் மகளிர் காவல் நிலைய போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...