For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிரீன்லாந்தின் பனி தீவு இரண்டாக உடைந்தது!: கடலில் மிதக்கும் 150 சதுர கி.மீ பரப்பு பனிக்கட்டி

By Chakra
Google Oneindia Tamil News

Greenland Glacier
நுக்: கிரீன்லாந்தின் மிகப் பெரிய பனிக்கட்டித் தீவு இரண்டாக உடைந்து சுமார் 150 சதுர கி.மீ பரப்பளவுள்ள இதன் ஒரு பகுதி ஆர்ட்டிக் கடலில் மிதக்க ஆரம்பித்துள்ளது.

பூமி வெப்பமாகி வருவதன் விளைவாகவே இந்த மாபெரும் பனித் தீவு உருகி இரண்டாக உடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கடந்த 48 ஆண்டுகளில் பிளவுபட்ட உலகின் மிகப் பெரிய பனிக் கட்டி இது தான்.

இப்போது உலகின் வட புலத்தில் இருந்து சுமார் 900 கி.மீ. தூரத்தில் கிரீன்லாந்துக்கும் கனடாவுக்கும் இடையே ஆர்ட்டிக் கடலில் மிதந்து கொண்டுள்ளது இந்த பனி மலை. இது மேலும் தெற்காக நகர்ந்தால் அப் பகுதியில் கப்பல் போக்குவரத்துக்கு பெரும் ஆபத்து சிக்கல் ஏற்படலாம்.

கனடாவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் கடந்த வாரம் செயற்கைக்கோள் படங்களை ஆராய்ந்தபோது பீட்டர்மேன் கிளேசியர் எனப்படும் இந்த பனித் தீவு இரண்டாக உடைந்தது தெரியவந்தது. இந்தப் பனிக் கட்டியை உருக்கினால் ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் 120 நாட்களுக்கு 24 மணி நேரம் தண்ணீர் சப்ளை செய்யலாமாம். அவ்வளவு பெரிய பனிக் கட்டி இதுவாகும்.

சுமார் 600 அடி அடர்த்தி கொண்ட இந்த பனிமலையைக் கொண்டு அமெரிக்காவின் ஹட்சன் ஆற்றை 2 ஆண்டுகளுக்கு நிரப்பி வைக்கலாம் என்கிறார்கள்.

டென்மார்க் நாட்டின் ஆளுமையி்ன் கீழ் உள்ள கிரீன்லாந்து வட அமெரிக்கக் கண்டத்தில் அமைந்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X