For Daily Alerts
சட்டசபைத் தேர்தலில் வக்கீல்களுக்கே அதிமுகவில் முன்னுரிமை-ஓ.பி.
மதுரை : வருகிற சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பில் வக்கீல்களுக்கு அதிக அளவில் சீட் தரப்படும் என்று கூறியுள்ளார் அதிமுக பொருளாளர் ஓ.பன்னீர் செல்வம்.
மதுரையில் நடந்த தென் மாவட்ட அதிமுக வக்கீல்கள் அணி கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் பேசினார். அவர் கூறுகையில்,
வரும் அக்டோபர் 18ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கலந்துகொள்ளும் பிரமாண்ட ஆர்ப்பாட்டம் மதுரையில் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டம் பிரமிக்க வைக்கும் வகையில் நடைபெற வழக்கறிஞர்கள் அணி சிறப்பாக செயல்பட வேண்டும்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவில் வழக்கறிஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். 2011ல் மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி மலரும். அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராவார் என்றார் ஓ.பி.