For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தூத்துக்குடி-கொழும்பு கப்பல்: மத்திய அரசு ஒப்புதல்

Google Oneindia Tamil News

திருவொற்றியூர்: தூத்துக்குடி- கொழும்பு இடையே பயணிகள் கப்பல் இயக்கும் திட்டத்திற்கு மத்திய அமச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இது குறித்து சென்னைத் துறைமுகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

கப்பல் போக்குவரத்துத் துறை தூத்துக்குடி - கொழும்பு இடையே பயணிகள் கப்பலை இயக்க முடிவு செய்தது. இதற்கு நேற்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் ஜி. கே. வாசன் தெரிவித்தார்.

இதையடுத்து தூத்துக்குடி- கொழும்பு இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து விரைவில் துவங்கும். இதற்கான ஏற்பாடுகளை உடனடியாக மேற்கொள்ளும்படி தூத்துக்குடி துறைமுக நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு ராமேஸ்வரம்- தலைமன்னார் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து துவங்கப்படும்.

தூத்துக்குடியில் இருந்து சுமார் 152 கி.மீ. கடல் மைல் தொலைவில் கொழும்பு இருக்கிறது. இந்த தூரத்தைக் கடக்க குறைந்தது 8 முதல் 10 மணி நேரமாவது ஆகும். விமானக் கட்டணத்தை ஒப்பிடுகையில் கப்பல் கட்டணம் குறைவாகத் தான் இருக்கும்.

இந்த திட்டம் தொடர்பாக இந்தியா, இலங்கை இடையே ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்று கூறப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X