For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெளிச்சத்திற்கு வந்த நர்சிங் சேர்க்கை ஊழல்: போலீஸ் தீவிர விசாரணை

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்குத் தான் மாணவர்கள் போலிச் சான்றிதழ்கள் சமர்பித்தார்கள் என்று நினைக்கையில் தற்போது நர்சிங் மாணவர்களும் போலிச் சான்றிதழ்கள் அளித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நர்சிங் மாணவர்கள் போலி +2 மதிப்பெண் சான்றிதழ்கள் கொடுத்துள்ளது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது குறி்த்து போலீசார் கூறியதாவது,

ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் சம்பத்தையும், அவரது உதவியாளர் சரவணனையும் நேற்று ஆரணி மற்றும் வேலூரில் வைத்து கைது செய்தோம். மேலும், அவர்களிடம் இருந்து போலி +2 மதிப்பெண் சான்றிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளோம் என்று தெரிவித்தனர்.

கடந்த 2006-07, 2007-08 மற்றும் 2008-09 ஆண்டுகளில் சேர்ந்த நர்சிங் மாணவர்கள் போலிச் சான்றிதழ்கள் கொடுத்துள்ளனர். இதை கண்டுபிடித்த மெட்ராஸ் மெடிகல் காலேஜ் அதிகாரிகள் போலீசில் புகார் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் தனிப் படை அமைத்து இது குறித்து விசரணை நடத்தி வருகின்றனர்.

English summary
Madras Medical College has found out that a lot of nursing students have submitted fake certificates. It lodges a complaint about this. Police have arrested 2 persons including a retired school head master. Police have set up a special force to investigate this case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X