For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கலைஞரை காப்பியடிக்கும் ஒபாமா-கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் : மு.க. ஸ்டாலின்

Google Oneindia Tamil News

வேலூர்: கலைஞர் காப்பீட்டுத் திட்டம் உலகத்திலேயே எங்கும் இல்லாத ஒரு சிறப்பான திட்டமாகும். இந்த திட்டத்தை அமெரிக்க அதிபர் ஒபாமா கூட நிறைவேற்ற முயன்று வருகிறார் என்று தமிழக துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் சுமார் ரூ. 1 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள நகராட்சி அலுவலகக் கட்டிடம் திறப்பு விழா, சார்பதிவாளர் அலுவலக கட்டிடம் திறப்பு விழா, நகராட்சி துப்புரவு பணியாளர் குடியிருப்பு கட்டிட அடிக்கல் நாட்டு விழா ஆகியவை நடைபெற்றது.

இந்த விழாவில் தமிழக துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய நகரசபை அலுவலகத்தை திறந்து வைத்து பேசியாதவது,

இங்கு கூடியிருக்கும் மக்களை பார்க்கும் போது இது நகராட்சி அலுவலக கட்டிட திறப்பு விழாவா, அல்லது 2011 சட்டசபை தேர்தலில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்கும் விழாவுக்கு முன்னோட்டமா என்று வியப்பாக உள்ளது.

ஆட்சிக்கு வந்தால் தான் என்னவெல்லாம் செய்வதாக கலைஞர் வாக்குறுதி அளித்தாரோ அத்தனையும் நிறைவேற்றி வருகிறார். கொடுத்த வாக்குறுதி தவிர மக்கள் நலன் கருதி பல்வேறு திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறார்.

கலைஞர் வீட்டு வசதி திட்டத்தின்கீழ் 6 ஆண்டுகளில் 21 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டி முடிக்கப்படும். இது வரை 3 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. வரும் தேர்தலில் வேறு கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்த திட்டம் என்னவாகுமோ என்று மக்கள் நினைக்கலாம்.

வரும் தேர்தலில் திமுக நிச்சயமாக வெற்றி பெறும். அதன் பிறகு மூன்றே ஆண்டுகளில் 21 லட்சம் வீடுகளும் கட்டி முடிக்கப்படும்.

கலைஞர் காப்பீட்டுத் திட்டம் உலகத்திலேயே எங்கும் இல்லாத ஒரு சிறப்பான திட்டமாகும். இதை அமெரிக்க அதிபர் ஒபாமா கூட நிறைவேற்ற முயன்று வருகிறார். அதையும் பெரிய நிறுவனங்கள் மூலம் தொடர்பு கொண்டு காப்பீட்டு திட்டத்திற்கான பணத்தை திரட்டி வருகின்றனர்.

குடிசையில் வாழும் குப்பன் முதல் சுப்பன் வரை தனியார் மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை பெறுவதற்கு அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்து வருகிறது. தமிழக அரசு கொண்டு வந்துள்ள 108 ஆம்புலன்ஸ் சேவை மக்களுக்கு பேருதவியாக இருக்கிறது.

ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதால் வரும் சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுத தைரியமாக ஓட்டு கேட்கும் என்றார்.

English summary
TN deputy CM Stalin said that American President Obama has copied Kalaignar insurance scheme. Karunanidhi has fulfilled whatever promises he made during election meetings, he told. Stalin is confident of DMK"s victory in 2011 assembly election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X